ஜப்பான் தலைநகர் தோக்கியோவில் வளர்க்கப்பட்ட 'ஸியாங் ஸியாங்' என்ற பெயரைக் கொண்ட பாண்டா கரடி சீனாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தோக்கியோவின் உவேனோ விலங்குத் தோட்டத்தில் கடந்த ஆறு ஆண்டுகளாகப் பார்வையாளர்களிடையே மிகவும் பிரபலமாக இருந்த இது, நேற்று சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டது. மிகுந்த வருத்தத்துக்கு ஆளான ஜப்பானியர்கள் கண்ணீருடன் 'ஸியாங் ஸியாங்'கை வழி அனுப்பி வைத்தனர்.
படம்: ஏஎஃப்பி

