பேங்காக்: தாய்லாந்தின் நாடாளுமன்றம் அடுத்த மாதம் கலைக்கப்படும் என்று அந்நாட்டுப் பிரதமர் பிராயுத் சனோச்சா அறிவித்துள்ளார்.
வரும் மே மாதம் தாய்லாந்தின் அடுத்த பொதுத் தேர்தலை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு வழிவகுக்க நாடாளுமன்றம் கலைக்கப்படவுள்ளது.
நாடாளுமன்றத்தை அடுத்த மாதம் கலைக்க எண்ணம் கொண்டுள்ளதாகத் தமது அமைச்சர்களிடம் கூறியதைத் திரு சனோச்சா நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். எந்தத் தேதியில் அவ்வாறு செய்யப்படும் என்பது குறித்த தகவல்களை அவர் வழங்கவில்லை.
அடுத்த மாதத் தொடக்கத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்படக்கூடும் என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குத் திரு சனோச்சா பதிலளித்தார். பொதுத் தேர்தலை மே மாதம் ஏழாம் தேதி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
தற்போதைய அரசாங்கத்தின் காண்டு தவணைக்காலம் அடுத்த மாதம் 23ஆம் தேதியன்று நிறைவடைகிறது.

