துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம், சிலர் மரணம்

துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம், சிலர் மரணம்

1 mins read
0d71144a-bd07-446b-adf5-6b122b01ba27
-

அன்­டாக்யா: துருக்கி-சிரியா எல்­லைப் பகு­தியை நேற்று முன்­தினம் உலுக்­கிய நில­ந­டுக்­கத்­தில் குறைந்­தது அறு­வர் மாண்­டு­விட்­ட­னர். அண்­மை­யில் இப்­ப­கு­தியை உலுக்­கிய மிக மோச­மான நில­நடுக்­கத்­தி­லி­ருந்து இரு நாடு­களும் மீண்­டு­வர முயற்சி செய்து­வ­ரும் வேளை­யில் இவ்­வாறு நிகழ்ந்­துள்­ளது.

ரிக்­ட­ரில் 6.4 அள­வி­லான இந்த நில­ந­டுக்­கம் நேற்று முன்­தி­னம் நேர்ந்­தது. துருக்­கி­யின் தெற்­குப் பகு­தி­யில் இருக்­கும் அன்­டாக்யா நக­ரி­லி­ருந்து தொடங்­கிய நில­ந­டுக்­கம் சிரியா, எகிப்து, லெப­னான் ஆகிய நாடு­க­ளி­லும் உண­ரப்­பட்­டது.

நில­ந­டுக்­கம் நிலத்­த­டி­யில் 10 கிலோ­மீட்­டர் ஆழத்­தில் உலுக்­கி­ய­தாக ஐரோப்­பிய, மெடிட்­டெ­ர­னி­யப் பகு­தி­க­ளுக்­கான நில­நடுக்க ஆய்வு நிலை­யம் தெரி­வித்­தது.

இந்த நில­ந­டுக்­கத்­தால் 294 பேர் காய­ம­டைந்­த­தா­க­வும் அவர்­களில் 18 பேருக்கு மோச­மான காயங்­கள் ஏற்­பட்­ட­தா­க­வும் துருக்­கி­யின் சுகா­தார அமைச்­சர் ஃபாரெட்­டின் கொக்கா தெரி­வித்­தார்.

இரு வாரங்­க­ளுக்கு முன்பு இப்­ப­கு­தியை உலுக்­கிய மோச­மான நில­ந­டுக்­கத்­தால் 47,000க்கும் அதி­க­மா­னோர் மாண்­ட­னர். நூறா­யி­ரம் கணக்­கான வீடு­கள் பெரும் சேதத்­திற்கு உள்­ளா­யின அல்லது முற்­றி­லும் அழிந்­து­போ­யின.

அந்த நில­ந­டுக்­கம் உலுக்­கிய பிறகு 90 நில அதிர்­வு­கள் உணரப்­பட்­ட­தாக துருக்­கி­யின் பேரி­டர், அவ­சரநிலை நிர்­வாக ஆணை­யம் குறிப்­பிட்­டது. அவை, பொது­வாக நில­ந­டுக்­கத்­துக்­குப் பின்பு வரும் நில அதிர்­வு­கள்.