காணாமற்போன பிரிட்டிஷ் பெண்ணின் உடல் கண்டுபிடிப்பு

காணாமற்போன பிரிட்டிஷ் பெண்ணின் உடல் கண்டுபிடிப்பு

1 mins read
77eac378-8721-4dd2-998c-9ede57c0a79d
-

லண்­டன்: பிரிட்­ட­னில் சென்ற மாதம் காணா­மற்­போன மாதின் உடல் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ள­தாக அந்­நாட்­டுக் காவல்­து­றை­யினர் தெரி­வித்­துள்­ள­னர்.

45 வயது நிக்­கோலா புல்லி, சென்ற மாதம் 27ஆம் தேதி­யன்று காணா­மற்­போ­னார். இங்­கி­லாந்­தின் மான்­செஸ்­டர் நக­ருக்கு சுமார் 72 கிலோ­மீட்­டர் தொலை­வில் இருக்­கும் செயின்ட் மைக்­கல் எனும் கிரா­மத்­துக்கு அருகே உள்ள ஆற்­றில் அவ­ரின் உடல் ஞாயிற்­றுக்­கி­ழ­மை­யன்று கண்­டெடுக்­கப்­பட்­டது.

திரு­வாட்டி புல்லி காணா­மற்­போ­னது பிரிட்­ட­னில் பெரும் சர்ச்சை­யைக் கிளப்­பி­யது. பெண்­கள் காணா­மற்­போ­கும் விவ­கா­ரத்தில் காவல்­து­றை­யி­னர் உட்­பட சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­கள் தனிப்­பட்ட தக­வல்­க­ளைக் கையா­ளும் முறை தொடர்­பில் சர்ச்சை எழுந்­தது. திரு­வாட்டி புல்­லியின் இறுதி மாதவிடாய் பிரச்­சி­னை­கள் போன்ற அவ­ரின் தனிப்­பட்ட தக­வல்­களை உள்­ளூர் காவல்­துறை­யி­னர் வெளி­யிட்­டிருந்தனர்.