பெய்ஜிங்: சீனாவின் உள் மங்கோலியா வட்டாரத்தில் நிலக்கரிச் சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்ததில் குறைந்தது இருவர் மாண்டனர். 50க்கும் அதிகமானோரைக் காணவில்லை என்று சீன அரசாங்கத்துக்குச் சொந்தமான சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்தது.
இன்னர் மொங்கோலியா பகுதியின் அல்சா லீக் பகுதியில் சம்பவம் நிகழ்ந்ததாக சீன அரசாங்கத்துக்குச் சொந்தமான மற்றொரு ஊடுகம் சிஜிடிஎன் குறிப்பிட்டது. விபத்து நேற்று பிற்பகலில் நிகழ்ந்தது.

