இந்தோனீசிய வங்கிகளுக்கு வருமான வரி இல்லை

இந்தோனீசிய வங்கிகளுக்கு வருமான வரி இல்லை

1 mins read
5d0559bb-85e5-46cc-8e31-1af8d82a9d5a
இந்­தோ­னீ­சி­யா­வில் புதி­தாக அமைக்­கப்­ப­ட­வுள்ள தலை­ந­க­ருக்கு மக்­க­ளை­யும் நிறு­வ­னங்­க­ளை­யும் ஈர்க்க அந்­நாட்­டில் பல வரிச் சலு­கை­களை வழங்கி வரு­கிறது. படம்: ராய்ட்டர்ஸ் -

ஜகார்த்தா: இந்­தோ­னீ­சி­யா­வில் புதி­தாக அமைக்­கப்­ப­ட­வுள்ள தலை­ந­க­ருக்கு மக்­க­ளை­யும் நிறு­வ­னங்­க­ளை­யும் ஈர்க்க அந்­நாட்­டில் பல வரிச் சலு­கை­களை வழங்கி வரு­கிறது. அவற்­றின்­கீ்ழ் 2035ஆம் ஆண்­டுக்­குள் முத­லீடு செய்­யும் வங்­கி­களும் காப்­பு­றுதி நிறு­வ­னங்­களும் 25 ஆண்­டு­கள் வரை வரு­மான வரி செலுத்­தத் தேவை­யி­ருக்­காது. 2045ஆம் ஆண்­டுக்­குள் முத­லீடு செய்­பவை 20 ஆண்­டு­கள் வரை வரு­மான வரிக் கழிவு பெறும்.

புதிய தலை­ந­க­ராக விளங்­க­வி­ருக்­கும் நுசாந்­தா­ரா­வில் இயங்­கும் வங்­கி­க­ளுக்­கும் காப்­பு­றுதி நிறு­வ­னங்­க­ளுக்­கும் இந்த வரிச் சலுகை பொருந்­தும்.

இந்­தோ­னீ­சி­யா­வின் முத­லீட்டு அமைச்சு வெளி­யிட்ட தக­வல்­க­ளை்க கண்ட புளூம்­பர்க் செய்தி நிறு­வ­னம் இந்த விவ­ரங்­க­ளைத் தெரி­வித்­துள்­ளது. அடுத்த ஆண்­டுக்­குள் அர­சாங்க அதி­கா­ரி­களை நுசாந்­தா­ரா­வுக்கு இடம்மாற்­றத் திட்­ட­மி­டப்­பட்டுள்ளது.