நோம்பென்: கம்போடியாவில் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒருவர் பறவைக் காய்ச்சலுக்கு ஆளாகி உயிரிழந்தார். 11 வயது சிறுமி கிருமித்தொற்றுக்கு பலியானார்.
மாண்ட சிறுமி வசித்த கிராமத்துக்கு அருகே மாண்டுகிடந்த பறவைகளின் பரிசோதனை முடிவுகளுக்காக அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.
கடந்த ஈராண்டுகளாக உலகளவில் பல பறவைகள் மட்டுமின்றி இதர சில விலங்குகளும் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளன. எனினும், இக்கிருமி மனிதர்களிடையே அதிகம் பரவுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று உலகச் சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
பறவைக் காய்ச்சலுக்கு உள்ளான விலங்குகளுடன் நேரடித் தொடர்புகொள்வோருக்கு மட்டுமே கிருமித் தொற்று ஏற்படக்கூடும் என்று குறிப்பிடப்பட்டது.

