150 வெளிநாட்டவர் மரணம்: விசாரணை நடத்துமாறு மலேசியாவுக்கு நெருக்குதல்

150 வெளிநாட்டவர் மரணம்: விசாரணை நடத்துமாறு மலேசியாவுக்கு நெருக்குதல்

1 mins read
4db6de67-590d-4e9e-9f13-907b19f4ced7
-

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வின் தடுப்­புக் காவல் நிலை­யங்­களில் இருந்த ஏழு சிறு­வர்­கள் உட்­பட 150 பேர் சென்ற ஆண்டு மாண்­ட­தாக அந்­நாட்டு அர­சாங்­கம் தெரி­வித்­தி­ருந்­தது. அதன் தொடர்­பில் தடுப்­புக் காவல் நிலை­யங்­க­ளின் நிலை­மையை ஆராய விசா­ரணை நடத்­து­மாறு மனித உரி­மைக் குழுக்­கள் மலே­சி­யாவை நெருக்­கு­கின்­றன.

அக­தி­கள் உட்­பட தகுந்த உரி­ம­மின்றி நாட்­டுக்­குள் வரு­வோரை மலே­சியா அடிக்­கடி தடுத்து வைப்­ப­துண்டு. தகுந்த உரி­மம் இல்­லாத மில்­லி­யன்­க­ணக்­கான வெளி­நாட்­ட­வர் மலே­சி­யா­வில் இருக்­கின்­ற­னர்.