பைன் ஹில்ஸ் (அமெரிக்கா): அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில் கொலை செய்த ஓர் ஆடவர் அச்சம்பவம் குறித்து தகவல் சேகரித்து வந்த செய்தியாளரையும் கொன்றார். உள்ளூர் நேரப்படி நேற்று முன்தினம் காலை ஃபுளோரிடா மாநிலத்தின் ஆரஞ்சு கவுன்டி பகுதியில் 19 வயது கீத் கெவின் மோசஸ், ஓர் 20 வயதுப் பெண்ணைச் சுட்டுக் கொன்றார்.
அன்று சிறிது நேரத்துக்குப் பிறகு மீண்டும் சம்பவ இடத்துக்கு வந்து வேறு சிலரைச் சுட்டார். அப்போது செய்தியாளருடன் ஓர் ஒன்பது வயது சிறுமியும் மாண்டார்.
நேற்று முன்தினம் மாலைக்குள் மோசஸைக் காவல்துறையினர் தடுத்து வைத்தனர்.

