பேங்காக்: தாய்லாந்தின் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் பலமுறை முகத்தை மாற்றும் அறுவை சிகிச்சையை மேற்கொண்டார். 25 வயது சராஹாட் சாவாங்ஜாய்ங் உருவத்தில் கொரியாவைச் சேர்ந்த ஒருவரைப் போல் மாறினார்.
இருந்தாலும் ஜிமின் சியோங் என்று தனது பெயரை மாற்றிக்கொண்ட சராஹாட்டை கடந்த வெள்ளிக்கிழமையன்று தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் காவல்துறையினர் பிடித்தனர்.

