தேர்வில் சிங்கப்பூரைப் பற்றிய கேள்விகளைக் கிண்டல் செய்ததாகச் சந்தேகிக்கப்படும் இளையர்கள் கைது

தேர்வில் சிங்கப்பூரைப் பற்றிய கேள்விகளைக் கிண்டல் செய்ததாகச் சந்தேகிக்கப்படும் இளையர்கள் கைது

1 mins read
92cdbd90-0f67-438c-9506-b5c21cab0d5d
-

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வில் உயர்­நி­லைப் பள்ளி வர­லாற்­றுத் தேர்­வில் சிங்­கப்­பூ­ரைப் பற்­றிய கேள்­வி­கள் இடம்­பெற்றதை இரு பதின்ம வய­தி­னர் கிண்­டல் செய்­வது பதி­வான காணொளி டிக்­டாக் சமூக ஊட­கத்­தில் பகி­ரப்­பட்­டது. அதன் தொடர்­பில் ஹூலூ சிலாங்­கூ­ரைச் சேர்ந்த இரண்டு 18 வயது ஆட­வர்­கள் கைது­செய்­யப்­பட்­ட­னர்.

ஓர் ஆசி­ரி­யர் புகார் தந்­த­தைத் தொடர்ந்து இரு­வ­ரும் கைதா­யி­னர். மன்­னிப்­புக் கேட்­டும் ஒரு காணொ­ளியை இவர்­கள் பதிவு செய்­த­னர்.