பாகிஸ்தானில் திருநங்கை செய்தியாளர்மீது தாக்குதல்

பாகிஸ்தானில் திருநங்கை செய்தியாளர்மீது தாக்குதல்

1 mins read
3fea475b-3392-48b4-91a7-d586ee31cccb
-

லாகூர்: பாகிஸ்­தா­னில் செய்தி வாசிப்­பா­ள­ராக வளர்ச்சி கண்ட முதல் திரு­நங்கை, அடை­யா­ளம் தெரி­யாத நபர்­க­ளால் சுடப்­பட்­டார். இச்­சம்­ப­வம் கடந்த வெள்­ளிக்­கி­ழ­மை­யன்று இவ­ரின் வீட்­டுக்கு வெளியே நிகழ்ந்­த­தென உள்­ளூர் ஊட­கங்­கள் தெரி­வித்­தன.

தாக்­கு­த­லுக்கு ஆளான 26 வயது மார்­வியா மாலிக் உயிர் தப்­பி­னார். லாகூ­ரில் உள்ள மருந்­துக் கடை ஒன்­றி­லி­ருந்து வீடு திரும்­பிக்­கொண்­டி­ருந்­த­போது துப்­பாக்கி ஏந்­திய நபர்­கள் இவரை நோக்­கிச் சுட்­ட­னர்.

பாகிஸ்­தா­னில் உள்ள திரு­நங்­கை­க­ளுக்­குக் குரல் கொடுத்­த­தற்­காக சில கால­மா­கவே தனக்கு பல மிரட்­டல்­கள் விடுக்­கப்­பட்­ட­தென மாலிக் தெரிவித்தார். பாது­காப்­புக்­காக இவர் இஸ்­லா­மா­பாத் உள்­ளிட்ட நக­ரங்­க­ளி­லும் வசித்து வந்­தா­ர்.