இத்தாலியில் படகு விபத்து: 43 பேர் மரணம்

இத்தாலியில் படகு விபத்து: 43 பேர் மரணம்

1 mins read
2dcf97ec-cbc8-4ba6-b507-3a7822f01ce9
-

ரோம்: இத்­தா­லி­யில் படகு ஒன்று மூழ்­கி­ய­தில் குறைந்­தது 43 பேர் மாண்­டு­விட்­ட­னர். அந்­நாட்­டின் கட­லோ­ர­க் காவற்­படை வெளி­யிட்ட அறிக்­கை­யில் இந்த விவ­ரம் தெரி­விக்­கப்­பட்­டது.

மாண்­ட­வர்­கள் அனை­வ­ரும் வெளி­நாட்­ட­வர். அவர்­களில் ஒரு கைக்­கு­ழந்­தை­யும் அடங்­கும் என்று சில தக­வல்­கள் வெளி­யா­யின.

வெளி­நாட்­ட­வர் சென்­று­கொண்­டி­ருந்த படகு இத்­தா­லி­யின் கிழக்­குப் பகு­தி­யில் உள்ள கலாப்­ரியா வட்­டா­ரத்­திற்கு அருகே மூழ்­கி­யது. ஆகக் கடைசி நில­வ­ரப்­படி 80 பேர் உயிர் தப்­பி­ய­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

குரோட்­டோன் மாநி­லத்­தில் உள்ள சுற்­றுலாத் தல­மான ஸ்டெக்­காட்டோ டி குட்ரோ பகு­தி­யில் குறைந்­தது 27 உடல்­கள் கடற்­கரைக்­குத் தள்­ளப்­பட்­ட­தாக இத்­தா­லி­யின் அன்சா செய்தி நிறு­வனம் கூறி­யது. மேலும் சில உடல்­கள் தண்­ணீ­ரில் காணப்­பட்­ட­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டது.

மூழ்­கிய பட­கில் 100க்கும் அதி­க­மா­னோர் இருந்­த­தாக அட்ன்­கு­ரோ­னோஸ் செய்தி நிறு­வ­னம் சொன்­னது. ஈரான், பாகிஸ்­தான், ஆப்­கா­னிஸ்­தான் போன்ற நாடு­க­ளைச் சேர்ந்­தோரை ஏற்றி வந்­த படகு மோச­மான பரு­வ­நிலை கார­ண­மாக பாறை­க­ளின்­மேல் மோதி விபத்­துக்கு உள்­ளா­னது.

கடல்­வ­ழி­யாக ஐரோப்­பா­வுக்­குள் நுழைய முய­லும் பல வெளி­நாட்­ட­வர் இத்­தா­லிக்கு வரு­வதுண்டு. அத்­த­கை­யோர் பயன்­ப­டுத்­தும் 'மெடிட்­டெ­ர­னி­யன் ரூட்' எனப்­படும் கடற்­பாதை உல­கின் ஆக அபா­ய­க­ர­மான பாதை­களில் ஒன்று.

2014ஆம் ஆண்­டி­லி­ருந்து 20,000க்கும் மேற்­பட்­டோர் மத்­திய மெடிட்­டெ­ர­னி­யன் பகு­தி­யில் காணா­மற்­போ­யி­னர் அல்­லது உயி­ரி­ழந்­து­விட்­ட­னர் என்று கணிக்­கப்­பட்­டுள்­ளது.