தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிணை பிடிக்கப்பட்ட ஆஸ்திரேலிய பேராசிரியர் விடுவிப்பு

1 mins read
ddf2278e-2697-4795-a7d1-eea57c57c3ae
-

சிட்னி: பாப்­புவா நியூ கினி­யில் ஆயு­தம் ஏந்­திய நபர்­க­ளால் பிணை பிடிக்­கப்­பட்­டி­ருந்த ஆஸ்­தி­ரே­லிய பேரா­சி­ரி­யர் ஒரு­வர் விடு­விக்­கப்­பட்­டுள்­ளார். கடத்தப்பட்டிருந்த மேலும் இரு­வ­ரும் விடு­விக்­கப்பட்டதாக ஆஸ்­தி­ரே­லிய அர­சாங்­கத்­துக்­குச் சொந்­த­மான ஏபிசி ஊட­கம் தெரி­வித்­தது.

அந்­தப் பேரா­சி­ரி­யர் உட்­பட சில தொல்­பொ­ரு­ளி­யல் ஆய்­வாளர்­கள் சென்ற வாரம் ஞாயிற்­றுக்­கி­ழ­மை­யன்று கடத்­தப்­பட்­ட­னர். பணம் பறிக்­கும் நோக்­கு­டன் இச்­செ­யல் மேற்­கொள்­ளப்­பட்­டது.

ஆஸ்­தி­ரே­லி­யா­வில் உள்ள பல்­க­லைக்­க­ழ­கம் ஒன்றில் வேலை செய்­யும் அந்­தப் பேரா­சி­ரி­யர், பாப்­புவா நியூ கினி­யைச் சேர்ந்த இரண்டு பட்­ட­தா­ரி­கள், பாடத் திட்­டங்­க­ளைச் சரி­வ­ரச் செயல்­படுத்­தும் பொறுப்பில் இருக்கும் ஓர் அதி­காரி ஆகி­யோர் கடத்­தப்­பட்­ட­வர்­கள். பாப்­புவா நியூ கினி­யில் மக்­கள் நட­மாட்­டம் அதி­கம் இல்­லாத பகு­தி­யில் அவர்­கள் பிணை பிடிக்­கப்­பட்­ட­னர்.