கட்சி தேர்தலிலிருந்து ஸாம்பிரி விலகல்

கட்சி தேர்தலிலிருந்து ஸாம்பிரி விலகல்

1 mins read
b72803c6-1f87-42df-bca4-41615cae3af5
-

புத்­ரா­ஜெயா: அம்­னோ­வின் கட்­சித் தேர்­தல் நடை­பெற இருக்­கிறது. இந்­நி­லை­யில் அக்­கட்­சி­யின் உத­வித் தலை­வர் பத­விக்­கான தேர்­த­லில் போட்­டி­யி­டப்­போ­வ­தில்லை என்று மலே­சிய வெளி­யு­றவு அமைச்­சர் டாக்­டர் ஸாம்­­பிரி அப்­துல் காதர் அறி­வித்­துள்­ளார்.

"வெளி­யு­றவு அமைச்­ச­ரா­கப் பதவி வகிக்­கி­றேன். எனக்கு ஏற்­கெ­னவே நிறைய பொறுப்­பு­கள் உள்­ளன. தேசிய முன்­ன­ணி­யின் தலை­மைச் செய­லா­ள­ரா­க­வும் இருக்­கி­றேன். கூட்­ட­ணி­யில் இருக்­கும் கட்­சி­கள், ஒரு­மைப்­பாட்டு அர­சாங்­கத்­தில் இடம்­பெ­றும் கட்­சி­க­ளுக்கு இடை­யி­லான உறவை வலுப்­ப­டுத்­து­வதே எனது இலக்கு. அதில் கவ­னம் செலுத்த விரும்­பு­கி­றேன்," என்று டாக்­டர் ஸாம்­பிரி தெரி­வித்­தார்.

அம்­னோ­வின் கட்­சித் தேர்­தல் மார்ச் 18ஆம் தேதி வரை நடை­பெ­றும். வரு­டாந்­திர கிளைப் பேரா­ளர்­க­ளின் கூட்­டங்­களும் மக­ளிர், இளை­யர் பிரி­வு­க­ளின் குழுத் தேர்­தல்­கள் நேற்று முன்­தி­னம் நடந்து முடிந்­தன.

அம்­னோ­வின் மூன்று உத­வித் தலை­வர்­க­ளுக்­கான தேர்­த­லும் உச்ச மன்­றப் பத­வி­க­ளுக்­கான தேர்­த­லும் மார்ச் 18ஆம் தேதி­யன்று நடை­பெ­றும்.