அமெரிக்காவிடமிருந்து 400 ஏவுகணைகள் வாங்கும் ஜப்பான்

அமெரிக்காவிடமிருந்து 400 ஏவுகணைகள் வாங்கும் ஜப்பான்

1 mins read
414d64b8-1062-44de-9fe5-32ec98cf607b
-

தோக்­கியோ: அமெ­ரிக்­கா­வி­ட­

மி­ருந்து ஜப்­பான் 400 டோம­ஹாக் ஏவு­க­ணை­களை வாங்­கும் என்று ஜப்­பா­னி­யப் பிர­த­மர் ஃபுமியோ கிஷிடா தெரி­வித்­துள்­ளார்.

வட­கொ­ரியா, சீனா போன்ற அண்டை நாடு­க­ளி­ட­மி­ருந்து நாளுக்கு நாள் மிரட்­டல்­கள் அதி­க­ரித்து வரும் நிலை­யில் ஜப்­பான் இந்த முடிவை எடுத்­தி­ருப்­ப­தாக அவர் கூறி­னார்.

ஏவு­க­ணை­களை வாங்க ஜப்­பான் 211.3 பில்­லி­யன் யென் (S$2.09 பில்­லி­யன்) ஒதுக்­கி­யி­ருப்­ப­தாக அந்­நாட்­டின் தற்­காப்பு அமைச்­சர் யசு­காசு ஹமாடா அண்­மை­யில் தெரி­வித்­தார்.

ஒவ்­வொரு ஆண்­டி­லும் கொஞ்­சம் கொஞ்­சமாக வாங்­கு

­வ­தை­விட ஒரே தட­வை­யாக பல ஏவு­க­ணை­களை வாங்க ஜப்­பான் திட்­ட­மிட்­டுள்­ள­தாக அவர் கூறி­னார்.

சீனா, வட­கொ­ரியா ஆகிய அண்டை நாடு­கள் விடுக்­கும் மிரட்­டல்­க­ளி­லி­ருந்து தம்­மைப் பாது­காத்­துக்­கொள்ள ஜப்­பான் அதன் தற்­காப்பு ஆற்­றலை பெரி­த­ள­வில் மேம்­ப­டுத்த இலக்கு கொண்­டுள்­ளது.

இரண்­டாம் உல­கப் போருக்­குப் பிறகு, ஜப்­பா­னின் ராணுவ மேம்­பாட்­டுக்­குப் பல கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கப்­பட்­டன.

விதிக்­கப்­பட்ட கட்­டுப்­பாட்­டின்­படி அடிப்­படை தற்­காப்­பில் மட்­டுமே ஜப்­பான் கவ­னம் செலுத்­த­லாம்.

ஆனால் சீனா விடுக்­கும் மிரட்­டல்­க­ளைக் கார­ணம் காட்டி கடந்த ஆண்டு அது தனது முக்­கிய பாது­காப்­புக் கொள்­கை­

க­ளைப் புதுப்­பித்­தது.

அது­மட்­டு­மல்­லாது, தற்­காப்­புக்­காக ஒதுக்­கப்­படும் நிதியை

இரட்­டிப்­பாக ஜப்­பான் விருப்­பம் தெரி­வித்­தி­ருப்­பது குறிப்­பி­டத்­தக்­கது.