அணுவாயுதங்களைக் குறைக்கும் பேச்சை மீண்டும் தொடங்க மாட்டோம்: மாஸ்கோ

அணுவாயுதங்களைக் குறைக்கும் பேச்சை மீண்டும் தொடங்க மாட்டோம்: மாஸ்கோ

1 mins read
58b0954e-0f4a-47da-9d28-987687c2747f
கடந்த வாரம் உக்­ரேன் போர் தொடர்­பில் மேற்­கத்­திய நாடு­களை ரஷ்ய அதி­பர் விளா­டி­மிர் புட்­டின் எச்­ச­ரித்­தி­ருந்­தார்.படம்: ஸ்பட்னிக் பூல் -

மாஸ்கோ: ரஷ்­யா­வின் நிலைப்­பாட்டை செவி­ம­டுத்­தால்­தான் அமெ­ரிக்­கா­வு­டன் அணு­வா­யு­தங்­க­ளைக் குறைக்­கும் பேச்­சு­வார்த்­தையை மீண்­டும் தொடங்­கு­வோம் என்று கிரம்­ளின் பேச்­சா­ளர் டிமிட்ரி பெஸ்­கோவ் நேற்று அறி­வித்­தார்.

கடந்த வாரம் உக்­ரேன் போர் தொடர்­பில் மேற்­கத்­திய நாடு­களை ரஷ்ய அதி­பர் விளா­டி­மிர் புட்­டின் எச்­ச­ரித்­தி­ருந்­தார்.

தனது உத்­தி­பூர்வ விமா­னப் படைத் தளங்­க­ளைத் தாக்­கும் முயற்­சி­களில் மேற்­கத்­திய நாடு­கள் நேர­டி­யாக ஈடு­ப­டு­வ­தா­கக் குற்­றம் சாட்­டிய அவர், அணு­வா­யுதப் பேச்­சு­வார்த்­தை­யில் பங்­கேற்­பதை நிறுத்­தி­வைப்­ப­தாக அறி­வித்­தார்.

இதற்­கி­டையே இஸ்­வெஸ்­டியா நாளி­த­ழுக்கு அளித்த பேட்­டி­யில் மாஸ்கோ மீது அமெ­ரிக்கா தலை­மை­யி­லான மேற்­கத்­திய நாடு­ களின் அணு­கு­முறை மாற வேண்­டும் என்று திரு பெஸ்­கோவ் தெரி­வித்­தார்.

உக்­ரே­னுக்கு ஆயு­தங்­களை வழங்­கும் நேட்டோ எங்­க­ளு­டைய எதி­ரி­கள் என்று அவர் கூறி­னார்.

இரு தரப்­பி­லும் போரைப் படிப்­ப­டி­யாகக் குறைப்­பதை வலி­யு­றுத்­தும் சீனா­வின் அமை­தித் திட்­டத்­தைப் பற்றி கருத்­து­ரைத்த திரு பெஸ்­கோவ், பெய்­ஜிங்­கின் யோச­னை கேட்­கப்­பட வேண்­டும் என்­றார்.

பிரச்­சி­னை­யைத் தீர்க்க உத­வும் எந்­த­வோர் அமைதி முயற்­சியையும் வர­வேற்­கி­றோம் என்­றும் அவர் தெரி­வித்­தார்.

ஒரு வரு­டத்­திற்கு முன்பு உக்­ரே­னுக்­குள் ஆயி­ரக்­க­ணக்­கான துருப்­பு­களை மாஸ்கோ அனுப்­பி­ய­போது ரஷ்­யா­வு­ட­னான கூட்­ட­ணியை முறித்­துக் கொள்ள சீனா மறுத்­து­விட்­டது.

இந்த நிலை­யில் வெள்­ளிக் ­கி­ழமை உக்­ரேன் போர் நிறுத்­தத்­துக்கு சீனா பகி­ரங்­க­மாக அழைப்பு விடுத்­தது.

உக்ரேனிய அதிபர் ஸெலன்ஸிகியும் பெய்ஜிங்கின் 12 அம்ச அமைதித் திட்டத்தை பரிசீலிப்பதாகத் தெரிவித்து உள்ளார்.