மணிலா: பிலிப்பீன்ஸ் கடலில் பாதி மூழ்கிய கப்பலின் எரிபொருளான டீசல் கசிவதால் சூற்றுச் சூழல் பாதிக்கப்படக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. அந்தக் கப்பலில் 800,000 லிட்டர் தொழிற்சாலை எண்ணெய் ஏற்றப்பட்டுள்ளது. ஓரியண்டல் மின்டோரோ நகருக்கு அருகே நாஜுவான் கடலோரத்தில் கப்பலிலிருந்து டீசல் கசிந்து கடலில் கலந்து வருகிறது.
கடற்பரப்பில் ஐந்து கிலோ மீட்டர் நீளத்துக்கும் 500 மீட்டர் அகலத்துக்கும் எண்ணெய்க் கசிவு காணப்படுவதாக பிலிப்பீன்ஸ் கடலோரக் காவல்படை தெரிவித்தது.
எம்டி பிரின்சஸ் எம்ப்ரஸ் எனும் அந்தக் கப்பலை ஆர்டிசி ரியால்ட் மரின் சர்வீசஸ் இயக்கி வருகிறது.
கப்பலில் உள்ள தொழிற்சாலை எண்ணெய்யும் கசிந்ததா என்பது தெரியவில்லை.
பிலிப்பீன்ஸ் கடலோரக் காவல் படையின் சுற்றுச் சூழல் பாதுகாப்புக் குழு நில வரத்தை மதிப்பிட்டு வருகிறது. இந்த நிலையில் கடலை சுத்தப்படுத்தும் பணியும் மற்றொரு புறம் தொடங்கப்பட்டுள்ளது.