ஹாங்காங்: துண்டுதுண்டாக உடல் உறுப்பு களை வெட்டி கொடூரமாகக் கொல்லப்பட்ட ஹாங்காங் பிரபலமான ஏபி சோயின் எஞ்சிய உடற்பாகங்களை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
டா குவு லிங் வட்டாரத்தில் காணாமல் போன கைகளையும் இதர பாகங்களையும் நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் தேடி வருவதாக ஹாங்காங் காவல்துறை தெரி வித்தது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை டாய் போவில் உள்ள மூன்று மாடி வீட்டில் 'சூப்' காய்ச்சும் பானையில் செல்வி சோயின் மண்டையும் இதர மார்புப் பகுதிகளும் கண்டுபிடிக்கப் பட்டன. கடந்த வாரம் அவரது சில உடற் பாகங்கள் அதே வீட்டில் குளிர்சாதனப் பெட்டியிலிருந்து மீட்கப்பட்டன.
இந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரை ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அனைவரும் சோயின் முன்னாள் கணவர் அலெக்ஸ் குவோங்குடன் தொடர்புடையவர்கள். குவோங்கின் தந்தையும் இதில் கைது செய்யப்பட்டுள்ளார். முக்கிய மூளையாகச் செயல்பட்ட முன்னாள் காவல்துறை அதிகாரி ஒருவரும் கைதாகியுள்ளார்.
சொத்துப் பிரச்சினையால் சோய் கொல்லப்பட்டிருக்கலாம் என காவல்துறை நம்புகிறது.
குவாங், 65, அவரது இரண்டு மகன்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அவரது மனைவி மீது காவல்துறை விசாரணையின்போது சாட்சியங்களை கலைத்ததாகவும் நீதிமன்றத்துக்கு தவறான வழியைக் காட்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

