சிறந்த காற்பந்து வீரர் மெஸ்ஸி
நியூசிலாந்துக்கு 'திரில்' வெற்றி
வெலிங்டன்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து ஓர் ஓட்டத்தில் 'திரில்' வெற்றி பெற்றுள்ளது. இரண்டு டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 1-0 என்ற நிலையில் முன்னிலை வகித்தது. இந்த நிலையில் வெலிங்டனில் நேற்று நடைபெற்ற இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றுள்ளது. நேற்று 2வது இன்னிங்சில் ஒரு விக்கெட் கைவசத்துடன் இரண்டு ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இங்கிலாந்து ஆடிய பரபரப்பான ஆட்டத்தில் ஆண்டர்சன் ஆட்டமிழந்ததால் வெற்றி நியூசிலாந்துக்குச் சாதமானது.
பாரிஸ்: 2022ஆம் ஆண்டின் ஃபிஃபாவின் ஆண்களுக் கான சிறந்த காற்பந்து வீரர் விருதை லயனல் மெஸ்ஸி வென்றுள்ளார்.
சிறந்த வீரர் விருதுக்கான இறுதிப்போட்டியாளர் பட்டியலில் மெஸ்ஸி, கிலியான் எம்பாப்பே, கரீம் பென்ஸிமா ஆகியோர் இடம்பெற்று இருந்தனர். இந்த நிலையில் திங்கள்கிழமை அன்று அர்ஜெண்டினாவைச் சேர்ந்த மெஸ்ஸி சிறந்த வீரராக அறிவிக்கப்பட்டார்.
கடந்த ஆண்டு கத்தாரில் நடைபெற்ற 22வது உலகக் கிண்ணக் காற்பந்து இறுதியாட்டத்தில் பிரான்சுடன் அர்ஜெண்டினா மோதியது. இதில் அர்ஜெண்டினாவின் அணித் தலைவரான தாக்குதல் வீரர் 35 வயது மெஸ்ஸி இரண்டு கோல்களைப் போட்டார். ஆனால் இந்த விறுவிறுப்பான இறுதியாட்டம் சமநிலையில் (3-3) முடிந்தது. இதையடுத்து பெனால்ட்டி வாய்ப்பில் 4-2 கோல் கணக்கில் பிரான்சை வீழ்த்தி 36 ஆண்டு களுக்குப் பிறகு உலகக் கிண்ணத்தை அர்ஜெண்டினா கைப்பற்றியது. காற்பந்து உலகில் 3வது முறை அர்ஜெண்டினா உலகக் கிண்ணத்தை வென்றது.
"வியப்பாக இருக்கிறது. இது ஒரு மகத்தான ஆண்டு, இன்றிரவு இங்கு வந்து இந்த விருதைப் பெறுவது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவம்," என்று பாரிஸில் நடைபெற்ற விருது நிகழ்ச்சியில் மெஸ்ஸி கூறினார், அப்போது, அவரது பக்கத்தில் பிரான்சின் தாக்குதல் வீரர் எம்பாப்பே அமர்ந்திருந்தார்.
உலகக் கிண்ண வரலாற்றில் இறுதியாட்டத்தில் தனது அணிக்கு மூன்று கோல்களைப் போட்ட இரண்டு வீரர்களில் ஒருவர் எம்பாப்பே. மற்றொருவர் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜோஃப் ஹர்ஸ்ட்.
ஃபிஃபாவின் சிறந்த வீராங்கனை விருதை ஸ்பெயினின் அலெக்ஸியா புடெல்லாஸ் வென்றுள்ளார்.

