விளையாட்டுச் செய்திகள்

2 mins read
15e2d62d-77f9-4ca6-a3cf-cc92b37f9868
ஒலிம்­பிக் உல­கப்­பு­கழ் சிங்­கப்­பூர் நீச்­சல் வீரர் ஜோசப் ஸ்கூ­லிங், 27, தென்­கி­ழக்கு ஆசிய விளை­யாட்­டுப் போட்டி­களில் (சீ போட்­டி­கள்) சிங்­கப்­பூரை பிர­தி­நி­திக்­க­மாட்­டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

'சீ' போட்­டி­கள்: ஸ்கூ­லிங் இல்லை

ஒலிம்­பிக் உல­கப்­பு­கழ் சிங்­கப்­பூர் நீச்­சல் வீரர் ஜோசப் ஸ்கூ­லிங், 27, தென்­கி­ழக்கு ஆசிய விளை­யாட்­டுப் போட்டி­களில் (சீ போட்­டி­கள்) சிங்­கப்­பூரை பிர­தி­நி­திக்­க­மாட்­டார். அவர் முதன்­மு­த­லாக 2011ல் இந்­தப் போட்­டி­களில் கலந்துகொண்­டார்.

அது முதல் இது­வரை ஸ்கூ­லிங் கலந்துகொள்­ளா­மல் அந்த நீச்­சல் போட்டி நடந்­தது கிடை­யாது. இப்­போ­து­தான் அவர் முதன் முத­லாக சிங்­கப்­பூரை பிர­தி­நி­திக்­கப்­போ­வ­தில்லை. சிங்­கப்­பூ­ரின் ஒரே ஒரு ஒலிம்­பிக் கிண்ண வெற்­றி­வீ­ர­ரான ஸ்கூ­லிங், ஆட­வர் 100 மீட்­டர் வண்­ணத்­துப்­பூச்சி பாணி நீச்­ச­லில் கலந்­து­கொள்ள தகு­தி­பெற்று இருந்­தார்.

ஆட­வர் 4x100 மீட்­டர் போட்டி குழு­வி­லும் அவர் தகுதி­பெற்று இருந்­தார். ஆனால் சிங்­கப்­பூர் நீச்­சல் வீரர்­கள் சங்­கத்­தின் பட்­டி­ய­லில் அவர் பெயர் இல்லை. அந்­தப் பட்­டி­யல் நேற்று வெளி­யி­டப்­பட்­டது.

நோம் பென் நக­ரில் மே 5 முதல் 17 வரை நடக்­கும் சீ போட்­டி­களில் 22 வீரர்­கள் கலந்­து­கொள்­வர் என்று அந்­தப் பட்­டி­யல் தெரி­விக்­கிறது.

109 ஓட்­டங்­க­ளு­டன் போன இந்­தியா

இந்­தூர்: ஆஸ்­தி­ரே­லிய கிரிக்­கெட் அணிக்­கெ­தி­ரான மூன்­றா­வது டெஸ்ட் போட்­டி­யில் இந்­திய அணி தனது முதல் இன்­னிங்­சில் 109 ஓட்­டங்­களை மட்­டுமே எடுத்து ஆட்­ட­மி­ழந்­தது.

பூவா தலை­யா­வில் வென்ற இந்­திய அணி முத­லில் பந்­த­டித்­தது. அணித்­த­லை­வர் ரோகித் சர்­மா­வும் ஷுப்மன் கில்­லும் தொடக்க வீரர்­க­ளா­கக் கள­மி­றங்கினர். ஆளுக்கு மூன்று பவுண்­ட­ரி­களை அடித்­த­போ­தும் அவர்கள் நிலைக்­க­வில்லை. ரோகித் 12 ஓட்­டங்­க­ளி­லும் கில் 21 ஓட்­டங்­க­ளி­லும் ஆட்­ட­மி­ழந்­த­னர்.

புஜாரா (1), ஜடேஜா (4), ஷ்ரே­யாஸ் (0) என அடுத்தடுத்து விக்­கெட்­டு­கள் விழ, இந்­தி­யா­வின் நிலை பரி­தா­ப­க­ர­மாக இருந்­தது.

சற்று தாக்­குப்­பி­டித்த கோஹ்லி 22 ஓட்­டங்­க­ளி­லும் ஸ்ரீகர் பரத் 17 ஓட்­டங்­க­ளை­யும் எடுத்­த­னர்.

உணவு இடை­வே­ளை­யின்­போது ஏழு விக்­கெட் இழப்பிற்கு 84 ஓட்­டங்­களை எடுத்­தி­ருந்த இந்­தியா, அதன்­பின் மேலும் 25 ஓட்­டங்­க­ளைச் சேர்த்து, எஞ்­சிய மூன்று விக்­கெட்­டு­க­ளை­யும் பறி­கொ­டுத்­தது.

மேத்யூ கூனமென் ஐந்து விக்கெட்டுகளையும் நேதன் லயன் மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

அடுத்ததாக, ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சை ஆடத் தொடங்கியது. உஸ்மான் கவாஜாவும் டிராவிஸ் ஹெட்டும் தொடக்க வீரர்களாகக் களம்கண்டனர். இந்திய அணியில் ராகுல், ஷமிக்குப் பதிலாக ஷுப்மன் கில், உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டனர்.

அதுபோல், ஆஸ்திரேலிய அணியில் கம்மின்ஸ், வார்னருக்குப் பதிலாக மிட்செல் ஸ்டார்க், கேமரன் கிரீன் இடம்பெற்றனர்.