தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிட்னியில் 32 வயது தமிழ்நாட்டு ஆடவர் சுட்டுக்கொலை

1 mins read
cff46134-7370-43fe-8d52-99be0fb70d9e
சிட்னி: ஆஸ்­தி­ரே­லி­யா­வின் சிட்னி ரயில் நிலை­யத்­தில் 28 வயது துப்­பு­ர­வா­ளர் ஒரு­வரை இந்­திய நாட்­ட­வர் ஒரு­வர் கத்­தி­யால் குத்­தி­ய­தா­கக் கூறப்­பட்­டது. அந்த இந்­தி­யரை ஆஸ்­தி­ரே­லிய காவல்­து­றை­யி­னர் சுட்டுக்கொன்றனர். படம்: பிக்ஸாபே -

சிட்னி: ஆஸ்­தி­ரே­லி­யா­வின் சிட்னி ரயில் நிலை­யத்­தில் 28 வயது துப்­பு­ர­வா­ளர் ஒரு­வரை இந்­திய நாட்­ட­வர் ஒரு­வர் கத்­தி­யால் குத்­தி­ய­தா­கக் கூறப்­பட்­டது. அந்த இந்­தி­யரை ஆஸ்­தி­ரே­லிய காவல்­து­றை­யி­னர் சுட்டுக்கொன்றனர்.

முகம்­மது ரஹ்­மத்­துலா சையது அகம்­மது, 32, என்ற அந்த இந்­தி­யர் தமிழ்­நாட்­டைச் சேர்ந்­த­வர் என்­றும் அவர் தற்­கா­லிக விசாவில் ஆஸ்­தி­ரே­லி­யா­வில் தங்கி இருந்­தார் என்­றும் சிட்­னி­யில் உள்ள இந்­திய தூத­ர­கம் தெரி­வித்­தது. இந்­தச் சம்­ப­வம் மிக­வும் கவலை தரு­வ­தா­க­வும் துர­திர்ஷ்­ட­வ­ச­மா­னது என்­றும் தூத­ர­கம் தெரி­வித்­தது.

இந்த விவ­கா­ரத்தை ஆஸ்­தி­ரே­லி­யா­வின் வெளி­யு­ற­வுத் துறை, காவல்­துறை ஆகி­ய­வற்­றி­டம் கொண்டு சென்று இருப்­ப­தா­கவும் இந்­திய தூத­ர­கம் கூறியது.

சிட்­னி­யில் உள்ள ஆபோர்ன் ரயில் நிலை­யத்­தில் துப்­பு­ர­வாளரை அகம்­மது தாக்­கி­ய­தா­க­வும் காவல் நிலை­யத்­தில் இருந்து வெளியே வந்த இரண்டு காவ­லர்­களை அவர் மிரட்­டி­ய­தா­க­வும் பிறகு அந்­தக் காவ­லர்­க­ளைத் தாக்க முயன்­ற­தா­க­வும் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

ஒரு காவல் அதி­காரி மூன்று முறை சுட்­ட­தில் இரண்டு குண்டு­கள் அகம்­ம­து­வின் நெஞ்­சில் பாய்ந்­த­தா­க தெரி­விக்கப்பட்டது.