சீனாவின் மிரட்டலைச் சமாளிக்க தைவானுக்கு $832 மி. மதிப்பில் அமெரிக்கா ஆயுத விற்பனை

சீனாவின் மிரட்டலைச் சமாளிக்க தைவானுக்கு $832 மி. மதிப்பில் அமெரிக்கா ஆயுத விற்பனை

2 mins read
4f6d3683-1046-4957-93c1-1a40f81869f1
-

தைப்பே: ஜன­நா­யக நாடான தைவானை தனது நாட்­டின் ஒரு பகுதி என்று வலியுறுத்தும் சீனா, அந்­நாட்­டுக்கு அடிக்­கடி தொந்­த­ரவு கொடுத்து வரு­கிறது.

தைவா­னின் வான்­வெ­ளி­யில் போர் விமா­னங்­களை ஊடு­ரு­வச் செய்து சீனா மிரட்டி வரு­கிறது. தைவா­னின் எல்­லை­யோ­ர­மாக போர்க்­கப்­பல்­க­ளைக் காட்டி அது அச்­சு­றுத்துகிறது.

இந்த நிலை­யில் தைவா­னுக்கு 619 மில்லியன் யுஎஸ் டாலர் மதிப்­புள்ள (S$832 மி. ) ஆயு­தங்­களை விற்­பனை செய்ய அமெ­ரிக்கா முன்­வந்­துள்­ளது. இதில் எஃப் 16 போர் விமா­னங்­களில் பொருத்­தக்­கூ­டிய ஏவு­க­ணை­களும் அடங்­கும்.

தைவா­னுக்கு அருகே தொடர்ந்து இரண்­டா­வது நாளாக சீனா பெரிய அள­வில் ஊடு­ரு­வ­லில் ஈடு­பட்­டுள்ள வேளை­யில் அமெ­ரிக்­கா­வின் ஆயுத விற்­பனை அறி­விப்பு வெளியாகி உள்ளது.

ஏற்­கெ­னவே பெய்­ஜிங்­கு­ட­னான அமெ­ரிக்க உறவு பட்­டும் படா­மல் இருந்து வரு­கிறது. இந்த நிலை­யில் அமெ­ரிக்­கா­வின் ஆயுத விற்­பனை இரு­த­ரப்பு உறவை மேலும் மோச­மாக்­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

ஆகா­யத்­தி­லி­ருந்து ஆகா­யம் பாயும் இரு­நூறு ஏவு­க­ணை­கள், நூறு 'ஏஜி­எம்-88பி' ரக ஏவு­க­ணை­கள் உட்­பட ஆயு­தங்­க­ளை­யும் சாத­னங்­க­ளை­யும் தைவா­னுக்கு விற்க தற்­காப்பு அமைச்சு அங்­கீ­கா­ரம் வழங்­கி­யுள்­ளது என்று பென்­ட­கன் திங்­கட்­கி­ழமை அன்று தெரி­வித்­தது.

"இந்த உத்­தேச விற்­ப­னை­யால் தைவா­னுக்கு அதன் ஆகாயவெ­ளி­யை­யும் வட்­டா­ரத்­தை­யும் தற்­காக்­கும் ஆற்­றல் அதி­க­ரிக்­கும்," என்று அறிக்­கை­யில் அமெ­ரிக்க தற்­காப்பு அமைச்சு குறிப்­பிட்­டது.

இதற்­கி­டையே கம்­யூ­னிச ராணு­வத்­தின் ஆத்­தி­ர­மூட்­டும் செயல்­க­ளை­யும் மிரட்­டல்­க­ளை­யும் வலு­வா­கச் சமா­ளிக்­க ஏவு கணை­கள் பெரி­தும் உத­வும் என்று தைவா­னிய தற்­காப்பு அமைச்சு கூறியது.

ரேதி­யன் டெக்­னா­ல­ஜிஸ், லாக்­ஹிட் மார்ட்­டின் ஆகிய இரண்­டும் இதில் முக்­கிய ஒப்­பந்த நிறு­வ­னங்­க­ளாக உள்­ளன.

தைவா­னுக்கு ஆயு­தங்­களை விற்­கும் இந்த இரு நிறு­வ­னங் களுக்­கும் சீனா தடை விதித்து உள்­ளது.

சென்ற வியா­ழக்­கி­ழமை தனது நாட்­டின் ஆகா­ய­வெ­ளி­யில் கடந்த 24 மணி நேரத்­தில் 21 சீன விமா­னங்­கள் ஊடு­ரு­வி­ய­தாக தைவான் தெரி­வித் திருந்தது.