கிரீஸ் ரயில் விபத்து; மக்கள் கொதிப்பு

1 mins read
5ada6d03-81c7-4d09-89bd-6d2200dcbbdd
-

லாரிசா: கிரீ­ஸில் நிகழ்ந்த மிக மோச­மான

ரயில் விபத்­தால் மக்­கள் ஆத்­தி­ர­ம­டைந்து உள்­ள­னர். ரயில் பெட்­டி­க­ளுக்கு இடையே சிக்­கி­யி­ருக்­கும் கரு­கிய சட­லங்­களை மீட்க மீட்­புப் பணி­யா­ளர்­கள் போராடி வரு­கின்­ற­னர். இந்த விபத்­தில் குறைந்­தது 46 பேர் கொல்­லப்­பட்­ட­னர். இத­னால் கிரீஸ் நாடே சோகத்­தில் மூழ்­கி­யுள்­ளது.

லாரிசா நக­ரில் செவ்­வாய்க்­கி­ழமை பின்­னே­ரத்­தில் 350க்கும் மேற்­பட்ட பய­ணி­களை ஏற்­றிச் சென்ற அதி­வேக ரயில் சரக்கு ரயி­லு­டன் நேருக்கு நேர் மோதி­யது. இதன் கார­ண­மாக சில பெட்­டி­களில் உஷ்­ணம் 1,300 டிகி­ரிக்கு அதி­க­ரித்து தீப்­பற்றி எரிந்­தது.

"வெப்­பம் 1,200 டிகி­ரிக்­கும் அதி­க­மாக இருந்­த­தால் பெட்­டிக்­குள் நுழைய முடிய வில்லை. யாரை­யும் காப்­பற்ற முடி­ய­வில்லை. சட­லங்­களே மீட்­கப்­பட்­டன," என்று 40 வயது மீட்­புப் பணி­யா­ளர் ஒரு­வர் ராய்ட்­டர்ஸ் செய்தி நிறு­வ­னத்­தி­டம் தெரி­வித்­தார்.

இறந்­த­வர்­களில் பெரும்­பா­லோர் பல் ­க­லைக் கழக மாண­வர்­கள். நீண்ட விடு­முறை கார­ண­மாக அவர்­கள் வீடு திரும்­பி­ய­போது விபத்து நேர்ந்­தது.

இந்த விபத்­தால் ஆத்­தி­ர­ம­டைந்த மக்­கள் ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர்.

ஏதென்­ஸில் உள்ள ரயில் அலு­வ­ல­கத்­தின் மீது மக்­கள் கற்­களை வீசித் தாக்­கி­னர். அவர்­களை கண்­ணீர்ப்­புகையை வீசி காவல்­து­றை­யி­னர் கலைத்­த­னர். தெசா­லொ­லினிக்­கி­யிலும் ஆர்ப்­பாட்­டம் வெடித்­தது. நேற்று நடந்த ஆர்ப்­பாட்­டம் கார­ண­மாக ரயில்­கள் நிறுத்­தப்பட்­ட­ன். ரயில்­க­ளின் தரத்தை மேம்­ப­டுத்த வேண்­டும் என்று மீண்­டும் மீண்­டும் கோரிக்கை விடுத்­தும் அர­சாங்­கம் கேட்­கா­த­தால் மக்­கள் ஆத்­தி­ர­ம­டைந்­துள்­ள­னர் என்று ஊழி­யர் சங்­கங்­கள் தெரி­விக்­கின்­றன.