விளையாட்டு: யுனைடெட்டைப் பொரித்தெடுத்த லிவர்பூல்

விளையாட்டு: யுனைடெட்டைப் பொரித்தெடுத்த லிவர்பூல்

1 mins read
b1ec906a-d590-4701-8abb-d4a639b6cc4b
-
multi-img1 of 2

லிவர்­பூல்: இங்­கி­லிஷ் பிரி­மி­யர் லீக் காற்­பந்­தாட்­டத்­தில் தனது பரம வைரி­யான மான்­செஸ்­டர் யுனை­டெட்டை 7-0 எனும் கோல் கணக்­கில் வென்று அசத்­தி­யுள்­ளது லிவர்­பூல்.

யுனை­டெட் கடை­சி­யாக இத்­தனை கோல் வித்­தி­யா­சத்­தில் தோல்­வி­ய­டைந்து 92 ஆண்­டு­கள் ஆகி­விட்­டன. அக்­குழு தனது வர­லாற்­றில் ஓர் ஆட்­டத்­தில் ஏழு கோல்­க­ளுக்கு மேல் விட்­ட­தும் இல்லை. அப்­ப­டிப்­பட்ட வர­லாற்­றுச் சிறப்­பு­மிக்க நிகழ்­வைப் படைத்­துள்­ளது லிவர்­பூல்.

முற்­பா­தி­யாட்­டத்­தில் இரு குழுக்­களும் சம­மான நிலை­யில் இருந்­தன. லிவர்­பூல் ஒரு கோலைப் போட்டு முன்­னுக்­குச் சென்­றது.

எனி­னும், பிற்­பா­தி­யாட்­டம் தொடங்­கி­ய­தி­லி­ருந்து லிவர்­பூ­லின் கோல் வேட்­டைத் தொடங்­கி­யது. என்ன செய்­வது என்று தெரி­யா­மல் திக்­கு­முக்­கா­டி­யது யுனை­டெட்.

பல­ரைக் கவ­ரும் வண்­ணம் விளை­யா­டி­வந்த யுனை­டெட்­தானா இது என்ற கேள்வி எழும் அள­விற்கு அமைந்­தது இந்த ஆட்­டம். அதே­வே­ளை­யில் இதற்கு முன்பு சிர­மப்­பட்­டு­வந்த லிவர்­பூ­லி­டம் மீண்­டும் பழைய தன்­னம்­பிக்­கை­யை­யும் வேகத்­தை­யும் காண­மு­டிந்­தது.

டார்­வின் நுனி­யெஸ், மோ சாலா, கோடி காக்போ ஆகிய மூவ­ரும் ஆளுக்கு இரண்டு கோல்­க­ளைப் போட்­ட­னர். லிவர்­பூ­லின் மற்­றொரு கோலைப் போட்­ட­வர் ராபர்ட்டோ ஃபர்­மினோ.

இந்த ஆட்­டத்­தில் யுனை­டெட் வெல்­லும் என்ற எதிர்­பார்ப்­பு­கூட பல­ரி­டையே இருந்­தது. ஆனால் தனது ஆற்­றலை அபா­ர­மான முறை­யில் நிரூ­பித்­தது லிவர்­பூல்.

பிரி­மி­யர் லீக் பட்­டி­ய­லில் யுனை­டெட் இன்­ன­மும் மூன்­றா­வது இடத்தை வகிக்­கிறது. எனி­னும், இது­வரை வளர்த்த தன்­னம்­பிக்கை இந்த ஆட்­டத்­திற்­குப் பிறகு சுக்­கு­நூ­றா­வ­தைத் தவிர்ப்­பதே யுனை­டெட் நிர்­வாகி எரிக் டென் ஹாக் எதிர்­கொள்­ள­வி­ருக்­கும் பெரிய சவா­லாக இருக்­கும்.