கோலாலம்பூர்: மலேசியாவின் ஊழல் ஒழிப்பு ஆணையம் தன் அலுவலகத்துக்கு இன்று வரும்படி தமக்கு அழைப்பு விடுத்துள்ளதாகக் முன்னைய பிரதமர் முகைதீன் யாசின் கூறியுள்ளார். ஃபேஸ்புக்கில் பதிவிட்ட அவர், தாம் நேற்று கைது செய்யப்பட்டதாகக் கூறிய ஊடகச் செய்தியை மறுத்தார். எனினும், ஆணையம் தம்மை அழைத்த காரணத்தை திரு முகைதீன் விவரிக்கவில்லை.
திரு முகைதீன் 2020 முதல் 2021 வரை 17 மாதங்கள் மலேசியப் பிரதமராகப் பதவி வகித்தார். அவர் அனுமதி வழங்கிய பல பில்லியன் டாலர் மதிப்புள்ள அரசாங்கத் திட்டங்கள் முறையாக இல்லை என்று கூறி அவற்றை மறுஆய்வு செய்ய பிரதமர் அன்வார் இப்ராகிம் உத்தரவிட்டார்.