சளிக்காய்ச்சல்: சீன நகரில் முடக்கநிலை திட்டம்

சளிக்காய்ச்சல்: சீன நகரில் முடக்கநிலை திட்டம்

1 mins read
9ede9022-99ef-4e8b-aead-c8a0a085aa08
சீனாவின் சீ'யென் நகரில் சளிக்காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்த முடக்கநிலையைச் செயல்படுத்துவது உள்ளிட்ட திட்டங்கள் வரையப்பட்டுள்ளன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

பெய்ஜிங்: சீனாவின் சீ'யென் நகரில் சளிக்காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்த முடக்கநிலையைச் செயல்படுத்துவது உள்ளிட்ட திட்டங்கள் வரையப்பட்டுள்ளன. தேவைப்பட்டால் பள்ளிகள், வேலையிடங்கள் ஆகியவற்றை மூடுவதும் திட்டங்களில் அடங்கும்.

இதைத் தொடர்ந்து கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவல் காலத்தில் சீனாவில் நடப்பில் இருந்த பல கடுமையான கட்டுப்பாடுகள் மீண்டும் செயல்படுத்தப்படக்கூடும் என்ற அச்சம் மக்களிடையே தலைதூக்கியுள்ளது.

சீனாவில் கொவிட்-19 கிருமிப் பரவல் கட்டுப்பாடுகள் பெரிய அளவில் தளர்த்தப்பட்ட பிறகு அந்நாட்டில் சளிக்காய்ச்சல் அதிகம் பரவிவருகிறது. அதைத் தொடர்ந்து இத்தகைய திட்டங்கள் வரையப்பட்டுள்ளன.