பெண்கள் மேலாடையின்றி நீந்த ஜெர்மனி அனுமதி

பெண்கள் மேலாடையின்றி நீந்த ஜெர்மனி அனுமதி

1 mins read
1f907978-cf69-49fb-8cf9-a75c88890f38
-

பெர்­லின்: பொது நீச்­சல்­கு­ளங்­களில் மேலா­டை­யின்றி நீந்த விரை­வில் அனை­வ­ரும் அனு­ம­திக்­கப்­ப­டு­வர் என்று ஜெர்­ம­னித் தலை­ந­கர் பெர்­லி­னில் அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­தாக பிபிசி நிறு­வ­னம் செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

திறந்­த­வெளி நீச்­சல்­கு­ளத்­தில் மேலாடை அணி­யா­மல் இருந்­த­தற்­காக அங்­கி­ருந்து வெளி­யேற்­றப்­பட்ட பெண் சட்ட நட­வ­டிக்கை எடுத்­த­தைத் தொடர்ந்து நீச்­சல்­குள விதி­முறை­யில் இந்த மாற்­றம் குறித்து அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

பாலின சமத்­து­வம் குறித்து வாதிட்ட அந்­தப் பெண், ஆண்­க­ளைப் போலவே பெண்­களும் மேலா­டை­யின்றி நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட அனு­ம­திக்­கப்­பட வேண்­டும் என்­றார்.

இதை­ய­டுத்து, பெர்­லின் நக­ரில் உள்ள பொது நீச்­சல்­கு­ளங்­களை நிர்­வ­கிக்­கும் Berliner Baederbetriebe எனும் நிறு­வ­னம், நீச்­ச­லின்­போது ஆடை அணி­வ­தன் தொடர்­பி­லான அதன் விதி­மு­றை­களை மாற்­றி­உள்­ளது.

புதிய விதி­மு­றை­கள் எப்­போது நடப்­புக்கு வரும் என்­பது பற்றி தெரி­ய­வில்லை. கடந்த கோடை­கா­லத்­தில் சில பகு­தி­களில் பெண்­கள் மேலா­டை­யின்றி நீந்த அனுமதி இருந்தது.