புதிய சீனப் பிரதமர் லி சியாங்

புதிய சீனப் பிரதமர் லி சியாங்

2 mins read
c36d0e4b-1ade-479a-a506-01c99e80d4c6
-

பெய்­ஜிங்: சீனா­வின் புதிய பிர­த­ம­ராக அந்­நாட்­டின் அதி­பர் ஸி ஜின்­பிங்­கிற்கு நெருக்­க­மான லி சியாங் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டுள்­ளார்.

நாட்­டின் எட்­டா­வது பிர­த­மரை முடிவு செய்­வ­தற்­காக நடந்த வாக்­கெ­டுப்­பில் 2,936 நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் கலந்­து­கொண்­ட­னர். அவர்­களில் மூவர் சியாங்­கிற்கு எதி­ராக வாக்­க­ளித்­த­னர். எட்­டுப் பேர் வாக்­கெ­டுப்­பில் பங்­கேற்­க­வில்லை.

சீனா­வில் பிர­த­ம­ராக தேர்ந்­தெடுக்­கப்­ப­டு­ப­வர் பெயர் அள­வில் மட்­டும் ஆட்சி செய்­வார். நாட்­டின் அதி­கா­ரம் மொத்­த­மும் அதி­பர் வசம்­தான் உள்­ளது.

சென்ற அக்டோபர் மாதம் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சிக் கூட்டத்தில் வெளியிடப்பட்ட முக்கியத் தலைவர்கள் பட்டியலில் லி சியாங்கின் பெயர் இடம் பெற்றிருந்தபோதே அவர் அடுத்த பிரதமராகக்கூடும் என்ற எதிர்பார்ப்புகள் நிலவியது.

லி சியாங், 2004 முதல் 2007க்கு இடை­யி­லான கால

­கட்­டத்­தில் அதி­பர் ஜின்­பிங்­கின் தலைமை அதி­கா­ரி­யா­க பணி­யாற்­றி­னார்.

‌ஷாங்­காய்­யின் முன்­னாள் கம்­யூ­னிஸ்ட் கட்­சித் தலை­வ­ரா­க­வும் இருந்த சியாங், பிர­த­மர் பத­வி­யின் தொடக்­கத்­தில் சில சிர­மங்­களை எதிர்­கொள்­ளக்­கூடும் என்று கரு­தப்­ப­டு­கிறது.

நாட்­டின் பொரு­ளா­தா­ரத்தை நிர்­வ­கிப்­ப­தில் 63 வய­தான லி சியாங் எவ்­வாறு செயல்­ப­டு­வார் என்று தெரிந்­துக்கொள்­வ­தில் உல­க நாடுகள் ஆர்­வ­மாக உள்­ளன.

அதே சம­யம் ஜின்­பிங்­ ஓரங்­கட்டியதாகக் கூறப்­படும் கெக்­கி­யாங்­கை­விட, லி சியாங்­கிற்கு பொரு­ளா­தா­ரத்தை நிர்­வ­கிக்க அதிக அதி­கா­ரங்­கள், வாய்ப்­பு­கள் வழங்­கப்­ப­டக்­கூ­டும் என்று அர­சி­யல் கவ­னிப்­பா­ளர்­கள் கூறு­கின்­ற­னர்.

அத்­து­டன் பிர­த­மர் பதவி மட்­டு­மல்­லா­மல், தேசிய மக்­கள் காங்­கி­ர­சின் பல்­வேறு துறை­கள், அமைச்­ச­கங்­க­ளின் தலைமைப் பத­வி­க­ளி­லும் தனது விசு­வா­சி­களை நிய­மித்து கட்சி, ஆட்சி என இரண்­டி­லும் ஜின்­பிங் தனது பிடியை வலு­வாக்கி வரு­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

புதிய சீனப் பிர­த­மர் லி சியாங்­கிற்கு, சிங்­கப்­பூர் பிர­த­மர் லீ சியன் லூங் தனது வாழ்த்­து­களைத் தெரி­வித்­துள்­ளார்.

சீனப் பிர­த­மர் லி சியாங்­கிற்கு அவர் எழு­திய வாழ்த்­துக் கடி­தத்­தில், வரும் ஆண்­டு­களில் இரு­தரப்பு உறவு தொடர்ந்து மேம்­படும் என்று தாம் நம்­பு­வ­தாக குறிப்­பிட்­டி­ருந்­தார்.