பிரிஸ்பன்: ஆஸ்திரேலியாவில் குவீன்ஸ்லாந்து மாநிலத்தின் பர்க்டவுன் உள்ளிட்ட பகுதிகள் மோசமான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
வெள்ளம் சூழ்ந்திருக்கும் பகுதிகளில் நடமாடுவதைத் தவிர்க்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் முதலைகள் காணப்பட்டதாகத் தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து குவீன்ஸ்லாந்து காவல்துறை இந்த எச்சரிக்கையை விடுத்தது.
இதற்கிடையே, பர்க்டவுன் நகரில் தண்ணீர் விநியோகத்தில் இடையூறு ஏற்பட்டுள்ளது. அதனால் தண்ணீரைச் சேமிக்குமாறு நகரவாசிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

