லாஸ் ஏஞ்சலிஸ்: அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்துக்கு அருகே ஆள்கடத்தலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் இரு படகுகள் கவிழ்ந்ததில் குறைந்தது எட்டு பேர் மாண்டனர். இச்சம்பவம் தென் கலிஃபோர்னிய கடற்கரைக்கு அருகே நேற்று முன்தினம் நிகழ்ந்ததாக அப்பகுதியின் மீட்புப் பணியாளர்கள் கூறினர்.
இரவு நேரத்தில் நிகழ்ந்த இச்சம்பவத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. சம்பவம் நேர்ந்த பகுதி மிகவும் அபாயகரமானதென்றும் தெரிவிக்கப்பட்டது.
இதேபோல் நேற்று முன்தினம் மத்திய தரைக்கடல் பகுதியில் படகு ஒன்று மூழ்கியிருக்கிறது. ஆகக் கடைசி நிலவரப்படி இச்சம்பவத்தில் 30 பேரைக் காணவில்லை என்றும் 17 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் இத்தாலியின் கரையோரக் காவல்படை தெரிவித்தது.
ஐரோப்பாவுக்குள் நுழைய முயன்ற வெளிநாட்டவரை ஏற்றி வந்த அந்தப் படகு லிபியாவிலிருந்து பயணம் செய்துகொண்டிருந்தது. கடந்த சில ஆண்டுகளில் மத்திய தரைக்கடல் பகுதி வழியாக ஐரோப்பாவுக்குச் செல்ல முயன்றோரில் இதுவரை நூற்றுக்கணக்கானோர் மாண்டுவிட்டனர்.

