இன்னும் ஓராண்டில் ஜிஎஸ்டி அமலாகாது

இன்னும் ஓராண்டில் ஜிஎஸ்டி அமலாகாது

2 mins read
d3d1a104-277a-4b88-af70-9a9d2997d7c2
-

கோலா­லம்­பூர்: அடுத்த ஆறு மாதங்­க­ளிலோ ஓராண்­டிலோ பொருள் சேவை வரியை (ஜிஎஸ்டி) மீண்­டும் கொண்டு வரும் திட்­டம் எது­வும் அர­சாங்­கத்­தி­டம் இல்லை என்று மலே­சி­யப் பிர­த­மர் அன்­வார் இப்­ரா­கிம் உறு­தி­ப­டத் தெரி­வித்துள்­ளார்.

நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று உரையாற்றிய அவர், மலே­சி­யர்­க­ளின் வரு­மான நிலை இன்­னும் குறை­வா­கவே உள்­ளது என்­றார்.

"ஜிஎஸ்டி என்­பது சக்­தி­வாய்ந்த, ஒளி­வு­ம­றை­வற்ற வரி­வி­திப்பு முறை. அதனை மீண்­டும் அமல்­ப­டுத்த மலே­சியா தயா­ராக இல்லை என்­பதை நான் ஏற்­கெ­னவே தெரி­வித்து இருக்­கி­றேன்.

"மக்­க­ளின் வரு­வாய் நிலை இன்­னும் குறை­வா­கவே உள்­ளது என்­ப­தால் அடுத்த ஆறு மாதத்­திலோ அல்­லது ஓராண்­டிலோ ஜிஎஸ்­டியை கொண்­டு­வ­ரு­வது பற்றி எந்த ஒரு பரி­சீ­ல­னை­யும் செய்­யப்­ப­ட­வில்லை.

"ஜிஎஸ்­டியை அமல்­ப­டுத்­தும் முன்­னர் மக்­க­ளின் வரு­மான நிலை உய­ர­வேண்­டும் என்­ப­தில் அர­சாங்­கம் கவ­ன­மாக உள்­ளது.

"பி40 எனப்­படும் 40 விழுக்­காட்­டுக்­கும் கீழ் வரு­மா­னம் ஈட்­டக்­கூ­டி­யோ­ரின் பிரி­வில் இன்­னும் ஏரா­ள­மா­னோர் உள்­ள­னர். மேலும், 130,000 பேர் பண வச­தி­யின்றி சிர­மப்­ப­டு­கின்­ற­னர்," என்று திரு அன்­வார் கூறி­னார்.

ஜிஎஸ்­டியை மீண்­டும் கொண்­டு­வ­ரு­வது பற்றி அர­சாங்­கம் பரி­சீ­லிக்­கி­றதா என்று தஞ்­சோங் காராங் தொகுதி உறுப்­பி­னர் டாக்­டர் ஸுல்­கா­ஃபெரி ஹனாபி நாடா­ளு­மன்­றத்­தில் எழுப்­பிய கேள்­விக்கு பிர­த­மர் அன்­வார் பதி­ல­ளிக்­கை­யில் இந்த விவ­ரங்­களை அளித்­தார்.

ஆறு மாநி­லங்­க­ளின் சட்­ட­மன்­றத் தேர்­தல் முடிந்த பின்­னர் ஜிஎஸ்­டியை மலே­சிய அர­சாங்­கம் கொண்டு வர­லாம் என்று கூறப்­ப­டு­வது பற்றி அவர் விளக்­கம் கேட்­டி­ருந்­தார்.

சிலாங்­கூர், நெகிரி செம்­பி­லான், பினாங்கு, கிளந்­தான், திரங்­கானு மற்­றும் கெடா மாநில சட்­ட­மன்­றங்­க­ளுக்கு ஒரே நேரத்­தில் தேர்­தல் நடத்­தப்­ப­ட­லாம் என்று கூறப்­ப­டு­கிறது.

முன்­ன­தாக, இந்த ஆறு மாநி­லத் தலை­வர்­களும் கடந்த மாதம் ஒன்­று­கூ­டிப் பேசி­னர்.

ஜூன் இரண்­டாம் வாரத்­தில் தங்­க­ளது சட்­ட­மன்­றத்­தைக் கலைக்க இந்த ஆறு தலை­வர்­

க­ளுக்கு இடை­யில் கருத்­தி­ணக்­கம் ஏற்­பட்­டது. கலைப்புக்குப் பின்னர் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடங்கும்.

மலேசியப் பிரதமர்: மக்கள் வருமானம் உயர்ந்த பின்னரே பரிசீலனை