மலேசிய அமைச்சர்: பிரதமருக்கு கஞ்சா பழக்கம் இல்லை

மலேசிய அமைச்சர்: பிரதமருக்கு கஞ்சா பழக்கம் இல்லை

1 mins read
5258df6f-2fd2-412c-a302-ef8b5a441df9
-

கோலாலம்பூர்: மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம். பொருளியல் அமைச்சர் ரஃபிஸி ரம்லி ஆகியோரின் பெயரில் மர்மப் பொட்டலம் ஒன்று விநியோகிக்கப்பட்டது. போதைப்பொருளான கஞ்சா கலந்து பற்பசை அடங்கிய அந்தப் பொட்டலம் காவல்துறை யிடம் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டது. திரு ரஃபிஸியின் அதிகாரி காவல் துறையில் புகார் ஒன்றை அளித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக நேற்று நாடாளுமன்ற வளா கத்தில் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் ரஃபிஸி, "இதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது. எனது அலுவலகத்திற்கு அனுப்பப்பட்ட பொட்டலத்தை நான் பிரிக்கவில்லை," என்றார்.

மேலும் அவர் கூறுகையில், "அந்தப் பொட்டலம் எனது பெயருக்கும் பிரதமரின் பெய ருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. நானோ பிரதமர் அன்வாரோ கஞ்சா உட்கொள்ளுவதில்லை என்பதால் அந்தப் பொட்டலம் வீணாகிவிட்டது. அது காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு விட்டது," என்றார்.