உயரம் தாண்டுதலில் புரட்சி ஏற்படுத்திய ஃபோஸ்பரி மறைவு
லாஸ் ஏஞ்சலிஸ்: உயரம் தாண்டுதலில் புதிய வரலாறு படைத்த திடல்தட சகாப்தம் டிக் ஃபோஸ்பரி (படம்) தமது 76வது வயதில் காலமானார். நிணநீர்ச் சுரப்பிப் புற்றுநோய் காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் காலமானதாக அவரது உதவியாளர் தெரிவித்தார். அமெரிக்காவின் ஓரிகன் மாநிலத்தில் உள்ள போர்ட்லாண்டில் 1947ஆம் ஆண்டு பிறந்த இவர், 1960களில் உயரம் தாண்டுதலில் பல புதுமையான பாணியைக் கையாண்டதன் மூலம் உலகளவில் பிரபலம் அடைந்தார். உயரம் தாண்டும் வீரர் எல்லைக் கம்பி அருகே வந்து நின்று கையை உயர்த்தி அப்படியே மேலே எழும்பித் தாண்டுவது அப்போது வழக்கமாகக் கடைப் பிடிக்கப்பட்டு வந்தது. ஆனால், ஃபோஸ்பரி இதனைப் பின்பற்றவில்லை. எல்லைக் கம்பியின் முன் தனது முதுகுப்பகுதி தெரியும்படி நின்றவாறு அப்படியே பின்னோக்கி எழும்பித் தாவினார். இந்த புதிய பாணியில் இவர் 2 மீட்டர் உயரம் தாண்டி பயிற்சி எடுத்தார். 1968ஆம் ஆண்டு மெக்சிகோவில் நடைபெற்ற ஒலிம்பிக் கோட்டியில் பங்கேற்றபோது இதே பாணியில் 2.24 மீட்டர் உயரம் தாண்டி தங்கம் வென்றார். அது ஒரு சாதனை யாக அமைந்ததோடு உயரம் தாண்டும் போட்டியில் 'ஃபோஸ்பரி ஸ்டைல்' என்னும் புதிய பாணி உருவானது.
ஒரு நாள் தொடரையும்
ஸ்டீவ் ஸ்மித் வழிநடத்துவார்
அகமதாபாத்: இந்தியா விற்கு எதிரான ஒருநாள் தொடரிலும் ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்டீவ் ஸ்மித் (படம்) தலைமை வகிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் விளை யாடுகிறது. நான்கு போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1
என்ற நிலையில் வென்றுள்ளது. இந்தத் தொடரில், 3வது டெஸ்ட் போட்டியின்போது ஆஸ்திரேலிய அணித் தலை வர் பேட் கம்மின்ஸின் தாயார் உடல்நிலை பாதிக்கப் பட்டதைத் தொடர்ந்து அவர் தாயகம் திரும்பினார். அதனால் ஸ்டீவ் ஸ்மித் அணித் தலைவராகச் செயல் பட்டார்.
இந்நிலையில், நாளை மறுதினம் (மார்ச் 17) இரு அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தொடங்குகிறது. இந்தத் தொடருக்கும் ஸ்டீவ் ஸ்மித் அணித் தலைவராகச் செயல்பட உள்ளார். பேட் கம்மின்ஸின் தாயார் திருமதி மரியா கடந்த வெள்ளிக்கிழமை காலமாகிவிட்டதால் கம்மின்ஸ் இந்தியா திரும்பும் முடிவைக் கைவிட்டுள்ளதாக பயிற்றுநர் ஆண்ட்ரு மெக்டொனால்ட் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 16வது தொடர் வெற்றி
அகமதாபாத்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் வெற்றி-தோல்வி இன்றி முடிந்ததால் இந்தியா
2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. உள்நாட்டில் இந்தியா தொடர்ச்சியாக வென்ற 16வது டெஸ்ட் தொடர் இது. 2012ஆம் ஆண்டு இங்கிலாந்திடம் 1-2 என்ற கணக்கில் தோற்றதே இந்தியாவின் ஆகக் கடைசி உள்நாட்டு டெஸ்ட் தொடர் தோல்வியாக இருந்தது. அதன்பிறகு 11 ஆண்டுகளாக இந்தியாவின் உள்நாட்டு ஆதிக்கம் தொடருகிறது. அதேபோல, ஆஸ்தி ரேலியாவுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியாக வென்றி ருக்கும் 4வது டெஸ்ட் தொடர் இது. இதற்கு முன்னர் 2017, 2018-19, 2020-21 ஆகிய ஆண்டுகளின் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவை இந்தியா வீழ்த்தியது. இவற்றில் இரு தொடர்கள் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.

