சோல்: கண்டம் விட்டு கண்டம் பாயும் இரு குறுந்தொலைவு ஏவுகணைகளை வடகொரியா பாய்ச்சியதாக தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. வடகொரியா தனது கிழக்குக் கடற்கரைப் பகுதியில் நேற்றுக் காலை உள்ளூர் நேரப்படி 7.40 மணியளவில் (சிங்கப்பூர் நேரம் காலை 6.40) அந்த ஏவுகணை களைப் பாய்ச்சியதாக தென் கொரிய ராணுவ இணைத் தளபதி அலுவலகம் கூறியது. ஏவுகணைகள் 620 கி.மீ. தூரம் விண்ணில் பாய்ந்து சென்றதாக வும் அது தனது அறிக்கையில் குறிப்பிட்டது. எந்த ஓர் ஆபத்தையும் சமாளிக்க
ராணுவம் உயர் விழிப்புநிலை யில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கை கூறியது.

