சிறுவர்களைக் கொன்ற அதிகாரிக்கு சிறை

சிறுவர்களைக் கொன்ற அதிகாரிக்கு சிறை

1 mins read
73eeaef2-188f-49f5-b369-a18baf09c584
-

மணிலா: பீலிப்­பீன்­ஸில் போதைப்­பொ­ருள் ஒழிப்பு நட­வ­டிக்­கை­யின்­போது இரு பதின்ம வய­துப் பிள்­ளை­க­ளைக் கொலை செய்த குற்றத்திற்காக காவல்­துறை அதி­காரி ஒரு­வ­ருக்கு 20 ஆண்டு சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்டுள்­ளது. ஜெஃப்ரி பெரஸ் எனப்­படும் அவர், 2017ஆம் ஆண்டு அந்­தப் பிள்­ளை­க­ளைக் கொன்­ற­தாக இம்­மா­தம் 1ஆம் தேதி தீர்ப்­ப­ளிக்­கப்­பட்ட விவ­ரத்தை அண்­மை­யில் ஏஎ­ஃப்பி கண்­டது. முன்­னாள் அதி­பர் ரோட்­ரிகோ டுட்­டர்டே ஆட்­சி­யிலிருந்த ஆறாண்டு காலத்­தில் போதைப்­பொ­ருள் ஒழிப்பு நட­வ­டிக்கை தீவி­ர­மாக நடை­பெற்­றது.