இம்ரான் கானின் கைதைத் தள்ளிவைத்த காவல்துறை

2 mins read
c6a059ea-9e37-4a7a-89ea-35d418455f23
-

லாகூர்: பாகிஸ்­தா­னின் முன்­னைய பிர­த­மர் இம்­ரான் கானைக் கைது செய்­யும் நட­வ­டிக்­கையை அந்­நாட்­டுக் காவல்­துறை நேற்று தள்ளி வைத்­தது.

இதைத் தொடர்ந்து திரு இம்­ரான் நேற்று மாலை கண்­ணீர்ப் புகை முகக்­க­வ­சத்தை அணிந்­து­கொண்டு தமது இல்­லத்தை விட்டு வெளி­யேறி, ஆத­ர­வா­ளர்­க­ளி­டம் பேசி­னார்.

லாகூர் நீதி­மன்­றம் காவல் துறைக்கு உத்­த­ர­விட்­ட­தால் கைது நட­வ­டிக்கை இன்று வரை நிறுத்­த வைக்கப்­பட்­ட­தாக மா நி­லத்­தின் தக­வல் தொடர்பு அமைச்­சர் ராய்ட்­டர்ஸ் செய்தி நிறு­வ­னத்­தி­டம் தெரி­வித்­தார்.

முன்­ன­தாக, திரு இம்­ரா­னைக் கைதுசெய்ய முயன்ற காவல் துறைக்­கும் அவ­ரது தெஹ்­ரீக் இ- இன்­சாஃப் கட்­சி­யின் ஆத­ர­வா­ளர்­க­ளுக்­கும் இடையே கை க­லப்பு ஏற்­பட்­டது. ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­கள் கற்­க­ளை­யும் செங்­கற் ­க­ளை­யும் வீசித் தாக்­கி­னர்.

காவல்­து­றை­யி­னர் தண்­ணீர் பீய்ச்சி அடித்து மக்­க­ளைக் கலைக்க முயன்­ற­னர். பின்­னர் திரு இம்­ரா­னின் வீட்­டுக்­குள் நுழைய அதி­கா­ரி­கள் முயன்­ற­னர்.

பிறகு லாகூ­ரில் நேற்று பாகிஸ்­தான் கிரிக்­கெட் லீக் ஆட்­டம் நடை­பெ­ற­வி­ருந்­த­தால் காவல்­துறை தனது நட­வ­டிக்­கையை நிறுத்­து­வ­தாக அதி­கா­ரி­கள் கூறி­னர். திரு இம்­ரா­னின் இல்­லம் அமைந்­துள்ள ஸமான் பூங்கா பகு­தி­யி­லி­ருந்து காவல்­து­றை­ யி­னர் வெளி­யே­றி­ய­தா­க­வும் சிலர் சாலைத் தடுப்­பு­களை விட்­டு­விட்டுச் சென்­ற­தா­க­வும் கூறப்­பட்­டது. அத­னால் திரு இம்­ரா­னின் ஆத­ர­வா­ளர்­க­ளுக்­கும் காவல்­ துறைக்­கும் இடையே நடந்த கை கலப்பு நிறுத்­தப்­பட்­டது. பாகிஸ்­தானை உலுக்­கி­வ­ரும் அர­சி­யல் குழப்­பம் ஓய்ந்­தது.

திரு இம்­ரான் பிர­த­ம­ராக இருந்­த­போது அர­சாங்­கத்­துக்கு வழங்­கப்­பட்ட பரி­சுப்­பொ­ருள்­களை விற்­றார் என்ற வழக்­கில் இஸ்­லா­மா­பாத் நீதி­மன்­றத்­துக்கு வரத் தவ­றி­ய­தால் அவ­ரைக் கைது செய்ய நீதி­மன்­றம் உத்­த­ர­விட்­டது.

ஆனால் வரும் 18ஆம் தேதிக்குள் நீதி­மன்­றத்­தில் தம்மை முன்­னி­றுத்திக் கொள் வ­தாக திரு இம்­ரான் உத்­த­ர­வா­தம் தந்ததை அடுத்து கைது முயற்சி தள்ளிவைக்­கப்­பட்­டது.