ஆஸி. நீர்மூழ்கிக் கப்பல் உடன்பாடு: விமர்சித்த முன்னாள் பிரதமர்

ஆஸி. நீர்மூழ்கிக் கப்பல் உடன்பாடு: விமர்சித்த முன்னாள் பிரதமர்

1 mins read
dbe7f9bb-66c5-49d9-a197-4797f152aefa
-

சிட்னி: அணு­சக்­தி­யுள்ள நீர்­மூழ்கிக் கப்­பல்­களை அமெ­ரிக்­கா­வி­ட­மி­ருந்து வாங்க ஆஸ்­தி­ரே­லியா செய்­து­கொண்ட உடன்­பாட்டை அந்­நாட்­டின் முன்­னாள் பிர­த­மர் போல் கீட்­டிங் குறை­கூ­றி­யி­ருக்­கிறார். அந்த ஒப்­பந்­தம் தவ­றான செயல் என்று அவர் வரு­ணித்­தார். தேவை­யில்­லா­மல் சீனாவை உடன்­பாடு குறிவைப்­ப­தா­க­வும் அத­னால் மோச­மான விளை­வு­கள் ஏற்­ப­ட­லாம் என்­றும் திரு கீட்­டிங் குறிப்­பிட்­டார்.

ஆஸ்­தி­ரே­லியா, அமெ­ரிக்­கா­வி­ட­மி­ருந்து அணு­வாற்­ற­லால் இயங்­கும் ஐந்து நீர்­மூழ்­கிக் கப்­பல்­கள் வரை வாங்­கப் போவ­தாக ஆஸ்­தி­ரே­லி­யப் பிர­த­மர் ஆண்­டனி அல்­ப­னீஸ் கடந்த திங்­கட்­கி­ழமை அறி­வித்­தி­ருந்­தார்.