தாய்லாந்து காவல் அதிகாரி சுட்டுக் காயம்

தாய்லாந்து காவல் அதிகாரி சுட்டுக் காயம்

1 mins read
f606c303-0e5e-4c77-bbcd-6e5626a3ee74
-

பேங்காக்: பேங்­காக்­கின் சாய் மாய் வட்­டா­ரத்­தில், தமது வீட்­டி­லி­ருந்து ஆகா­யத்­தில் துப்­பாக்கி­யால் பலநேரம் சுட்ட வண்­ணம் இருந்த காவல்­துறை அதி­கா­ரியைத் தாய்லாந்துக் காவல்­துறையின் சிறப்­புப் படையினர் சுட்­டுக் காயப்­ப­டுத்­தி­னர்.

காவல்­துறை லெஃப்டி­னண்ட் கர்­னல் கிட்­டிக்­கன் சேங்­பூன் சிகிச்­சைக்­காக மருத்­து­வ­மனை கொண்டு செல்லப்­பட்­டார்.

உளவுத் துறையில் பணி­யாற்­றிய கிட்­டிக்­க­னுக்கு மன­ந­லப் பிரச்­சி­னை­கள் இருந்­த­தா­கக் கூறப்­பட்­டது. நேற்று முன்­தி­னம் பிற்­ப­க­லில் கிட்­டிக்­கன் சுடத் தொடங்­கி­ய­தும் அப்­ப­குதி மக்­கள் வீடு­க­ளை­விட்டு வெளி­யேற்­றப்­பட்­ட­னர். இர­வி­லும் அவர் துப்­பாக்­கி­யால் தொடர்ந்து சுட்­டார். ஆனால் அவர் யாரை­யும் பிணை பிடிக்­க­வில்லை.

காவல்­துறையினர் வீட்­டுக்­குள் கண்­ணீர் புகைக் குண்டு களை வீசி­யும் மின்தொடர்­பைத் துண்­டித்­தும் அவரை அங்­கி­ருந்து வெளி­யேற்ற முயன்­ற­னர்.

ஆனால் 20 மணி நேரப் பேச்சு­வார்த்தை பல­ன­ளிக்­கா­த­தால் சிறப்­புப் பிரிவு உள்ளே அனுப்பப்பட்டது.

கிட்டிக்கனின் உடல்நிலை குறித்த விவரம் தெரியவில்லை.