ஹனோய்: வெளிநாட்டுச் சுற்றுப் பயணிகளை வியட்னாமுக்கு ஈரப்பதற்காக சில விசா விதிமுறைகளைத் தளர்த்துமாறு அந்நாட்டுப் பிரதமர் ஃபாம் மின் சின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள் வியட்னாமில் செலவிடக்கூடிய அதிகபட்ச கால அவகாசத்தை அதிகரிப்பது, அந்நாட்டின் மின்விசா திட்டத்தைக் கூடுதலானோருக்கு நீட்டிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு திரு சின் தமது அமைச்சர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறார். அந்நாட்டின் அரசாங்க இணையத்தளத்தில் இந்த விவரங்கள் இடம்பெற்றன.
வியட்னாமுக்கு உல்லாசப் பயணம் மேற்கொற்வதற்கான விசாவைப் பெறுவதில் சிக்கல்கள் இருந்து வந்துள்ளன. கொள்ளைநோய்ப் பரவ் காலத்துக்குப் பிறகு சுற்றுப்பயணிகளை ஈர்ப்பதற்கு அதுவே அந்நாட்டுக்கு இடையூறாக இருக்கிறதென்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன. சென்ற ஆண்டு 3.7 மில்லியனுக்கும் குறைவான சுற்றுப்பயணிகளே வியட்னாம் சென்றனர். சாலையோர உணவு, அழகான கடற்கரைகள் போன்றவற்றுக்குப் பிரபலமான நாடு வியட்னாம்.

