பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் ஆறு மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருப்பதை முன்னிட்டு பக்கத்தான் ஹரப்பான், தேசிய முன்னணிக் கூட்டணிகளுக்கிடையே தேர்தல் உடன்பாடு ஒன்று இடம்பெறும். ஆனால் அவை இரண்டும் கூட்டணி அமைத்துக்கொள்ளாது என்று கெஅடிலான் கட்சியின் தலைமைச் செயலாளர் சைஃபுதீன் நசுட்டியோன் இஸ்மாயில் கூறியுள்ளார்.
கெஅடிலான், பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியில் இருக்கும் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமின் கட்சி.
இரு கூட்டணிகளும் ஒரே இடத்துக்குப் போட்டியிடாது என்றும் அவர் தெரிவித்தார்.

