மலேசியாவின் 5ஜி கட்டமைப்பு: தலைவர்கள் இல்லை

மலேசியாவின் 5ஜி கட்டமைப்பு: தலைவர்கள் இல்லை

1 mins read
d5e5e326-cb5a-4f8e-92c3-8e705bde5919
-

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வின் 5ஜி தொலைத்தொடர்புக் கட்­ட­மைப்­பைச் செயல்­ப­டுத்­தும் 'டிஎன்பி' எனும் டிஜிட்­டல் நேசி­யோ­னால் பர்­ஹாட் நிறு­வ­னத்­தில் தற்­போது தலைமை நிர்­வாகி பொறுப்­பில் எவரும் இல்லை.

அப்­பொ­றுப்பை வகித்த திரு அகஸ்­டஸ் ரால்ஃப் மார்­ஷ­ல் என்பவரின் தவ­ணைக் காலம் கடந்த சனிக்­கி­ழ­மை­யன்று நிறை­வ­டைந்­தது. அவ­ருக்­குப் பதி­லாக வேறு யாரும் நிய­மிக்­கப்­ப­டா­த­தைத் தொடர்ந்து இந்­நிலை உரு­வெ­டுத்­துள்­ளது.

அர­சாங்க நிறு­வ­ன­மான 'டிஎன்பி'க்கு ஏற்­கெ­னவே தலை­வர் பொறுப்­பில் யாரும் இல்­லா­மல் இருந்­தது. இப்­போது தலைமை நிர்­வாக அதி­கா­ரி­யும் இல்லை.

தலை­வர்­க­ளின்றி நிறு­வ­னம் சொந்­த­மாக இயங்­கும் உணர்வு இருப்­ப­தாக பலர் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சி­டம் தெரி­வித்­தனர்.

"கடந்த திங்­கட்­கி­ழமை முதல் தலைமை நிர்­வாக அதி­காரி என்று யாரும் இல்லை. எனி­னும், 'டிஎன்பி'க்கான அடுத்­த கட்ட நட­வ­டிக்கைகள், 5ஜி கட்­ட­மைப்­புக்­கான திட்­டங்­கள் ஆகி­ய­வற்றை ஆலோ­சிப்­ப­தற்­கான சந்­திப்­பு­கள் தொடர்ந்து நடை­பெற்று வரு­கின்­றன. அவை தொட­ர­வும் செய்­யும்," என்று பெயர் வெளி­யி­டாத அதி­காரி ஒரு­வர் கூறி­யிருக்கி­றார்.

மலே­சி­யா­வில் 5ஜி கட்­ட­மைப்­பைச் செயல்­ப­டுத்­து­வது குறித்து இம்­மாத இறு­திக்­குள் பரி­சீ­லனை செய்­யப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

திட்­ட­மிட்­ட­படி அதைச் செய்து­மு­டிப்­பது சாத்­தி­யம் என்று அந்­நாட்­டின் மின்­னி­லக்க, தொடர்பு அமைச்­சர் ஃபாமி ஃபாட்ஸில் தொடர்ந்து உறு­தி­ய­ளித்து வந்­துள்­ளார்.