ஜோகூரில் பட்டப்பகலில் கொள்ளை, தாக்குதல்

ஜோகூரில் பட்டப்பகலில் கொள்ளை, தாக்குதல்

1 mins read
0d2a6f81-f5bf-4d4e-a683-be1cde5a9f69
-

ஜோகூர் பாரு: மலே­சி­யா­வின் ஜோகூர் மாநி­லத்­தில் உள்ள புத்­திரி துறை­மு­கப் பகு­தி­யில் உள்ள அடுக்­கு­மாடி வீட்­டுக் கட்­ட­டத்­துக்கு அருகே ஆயு­தம் ஏந்­திய நபர்­கள் பட்­டப் பக­லில் ஒரு­வ­ரி­ட­மி­ருந்து கொள்ளை அடித்­தி­ருக்­கின்­ற­னர்.

தாக்­கு­த­லுக்கு ஆளா­ன­வர் ஓர் இணைய வர்த்­த­கர். அவ­ரின் கால்­க­ளி­லும் கைக­ளி­லும் காயங்­கள் ஏற்­பட்­டன.

இச்­சம்­ப­வம் காணொ­ளி­யில் பதி­வு­செய்­யப்­பட்­டது. அந்­தக் காணொளி சமூக ஊட­கங்­களில் பர­வ­லா­கப் பகி­ரப்­பட்­டது.

இணைய வர்த்­த­க­ரின் 'பிக்­கப் டிரக்' வாக­னத்தை வழி­ம­றித்து பாராங்­கல் போன்ற ஆயு­தங்­களை வைத்­தி­ருந்த ஆட­வர்­கள் அவ­ரைத் தாக்­கி­னர். இணைய வர்த்­த­கர், வாக­னத்­தின் ஓட்­டு­நர் இருக்­கை­யில் அமர்ந்­தி­ருந்­தார்.

வாக­னக் கத­வைத் திறந்து ஆயு­தம் ஏந்­திய நபர்­கள் வர்த்­த­க­ரைத் தாக்­கி­னர். வாக­னத்­தி­லி­ருந்து அவர் ஓடி­ய­போ­தும் அந்­ந­பர்­கள் அவ­ரைத் துரத்­திப் பிடித்­துத் தாக்கி அவ­ரி­ட­மி­ருந்து திரு­டி­னர். ஆகக் கடைசி நில­வரப்­படி இரண்டு சந்­தே­க­ந­பர்­களைக் காவல்­து­றை­யி­னர் பிடித்­த­னர்.