வானூர்திச் சம்பவம்: காணொளி வெளியானது

வானூர்திச் சம்பவம்: காணொளி வெளியானது

1 mins read
65def6fa-89a3-4d27-a758-cb0f3759c5d9
-

வாஷிங்­டன்: மூன்று நாள்­களுக்கு முன்பு அமெ­ரிக்க ராணு­வத்­தின் வானூர்­தியை ரஷ்ய ஆகா­யப் படை விமா­னம் இடை­ம­றித்­தது; அச்­சம்­ப­வம் பதி­வான காணொ­ளியை அமெ­ரிக்க தற்­காப்பு அமைச்சு அம்­ப­லப்­ப­டுத்­தி­யுள்­ளது.

ரஷ்­யா­வின் சு-27 ரக ஆகா­யப் படை விமா­னம் இடை­மறித்­த­தைத் தொடர்ந்து அமெ­ரிக்­கா­வின் எம்­கியூ-9 வானூர்தி கருங்­க­ட­லுக்­குள் விழுந்து மூழ்­கி­யது. அதற்கு முன்பு ரஷ்ய விமா­னம் வானூர்­திக்கு மிக அரு­கில் வந்து எரி­சக்­தியை வெளி­யி­டும் காட்­சி இந்­தக் காணொளியில் இடம்பெற்றுள்ளது.

உக்­ரேன் போர் தொடங்­கி­ய­திலி­ருந்து அமெ­ரிக்­கா­வுக்­கும் ரஷ்­யா­வுக்­கும் நேரடியாக மோதல் ஏற்­பட்­டிருப்பது இதுவே முதல்­முறை.

எனி­னும், தங்­க­ளின் விமா­னம் அவ­ச­ரப்­பட்டு அத்­து­மீறி இச்­செ­ய­லில் ஈடு­பட்­ட­தா­கச் சொல்­லப்­படுவதை ரஷ்யா மறுத்துள்­ளது.