மியன்மார் மடாலயத் தாக்குதலில் 22 பேர் மரணம்

மியன்மார் மடாலயத் தாக்குதலில் 22 பேர் மரணம்

2 mins read
21e0a326-906b-4043-b606-cb47be24efbd
-

யங்­கோன்: மியன்­மா­ரின் மத்­திய பகு­தி­யில் உள்ள மடா­ல­யத்­தில் பௌத்த பிக்­கு­கள் மூவர் உட்­பட 22 பேர் கொல்­லப்­பட்­டுள்­ள­னர். இவர்­கள் அனை­வ­ரும் அரு­கி­லி­ருந்து சுட்­டுக் கொல்­லப்­பட்­டுள்­ள­தாக பிரேத பரி­சோ­தனை முடி­வு­கள் காட்­டு­வ­தாக செய்­தித் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

இது குறித்து கருத்­து­ரைத்த ராணுவ ஆட்சி எதிர்ப்­பா­ளர்­கள், அப்­பாவி மக்­களை குறி­வைத்து ராணு­வம் நடத்­திய தாக்­கு­தல் என்று கூறி­யது. ஆனால், இந்த சம்­ப­வம் குறித்து பேசிய ராணு­வப் பேச்­சா­ளர் ஒரு­வர், தெற்கு மியன்­மா­ரில் உள்ள ஷான் மாநில பின்­லாங் பகு­தி­யில் அங்­குள்ள கிளர்ச்­சிக்­கா­ரர்­க­ளு­டன் ஏற்­பட்ட மோத­லில் போரா­ளி­கள் கொல்­லப்­பட்­ட­தாக தெரி­வித்­தார்.

இந்­தச் சம்­ப­வத்­தில் அப்­பாவி மக்­கள் எவ­ரை­யும் ராணு­வம் தாக்­கிக் கொல்­ல­வில்லை என்­றும் அவர் விளக்­கி­னார்.

ஸோ மின் தான் என்ற அந்த ராணு­வப் பேச்­சா­ளர் கரேன் தேசிய தற்­காப்­புப் படை என்ற போர்­வை­யில் கிளர்ச்­சிக்­கா­ரர்­கள் மற்­றொரு போரா­ளிக் குழு­வு­டன் சேர்ந்து நான் நியேன்ட் என்ற கிரா­மத்­தில் தாக்­கு­தல் நடத்­தி­ய­தா­கக் கூறி­னார். தொடர்ந்து பேசிய அவர், "திடீ­ரென அந்த பயங்­க­ர­வா­தக் குழுக்­கள் துப்­பாக்­கிச்­சூடு நடத்­தி­ய­தில் சில கிரா­ம­வா­சி­கள் கொல்­லப்­பட்­ட­னர், வேறு சிலர் காய­ம­டைந்­த­னர்," என்று கூறி­னார்.

எனி­னும், இது குறித்து மேல் விளக்­கம் அறிய தமது செய்­தி­யா­ளர் தொலை­பேசி வழி தொடர்புகொள்ள முயற்சி மேற்­கொண்­டது பய­னில்­லா­மல் போன­தாக ராய்ட்­டர்ஸ் செய்தி நிறு­வ­னம் தெரி­வித்­துள்­ளது.

இந்­தக் குற்­றச்­சாட்டை மறுத்த கரேன் தேசிய தற்­காப்­புப் படை­யைச் சேர்ந்த பேச்­சா­ளர், தமது போரா­ளி­கள் அந்த கிரா­மத்­தில் இம்­மா­தம் 12ஆம் தேதி நுழைந்­த­போது, அங்­குள்ள பௌத்த மடா­ல­யத்­தில் இறந்த உடல்­கள் சித­றிக் கிடந்­த­தா­கத் தெரி­வித்­தார்.

இதன் தொடர்­பில் அந்­தப் போரா­ளிப் படை­யி­னர் வழங்­கிய புகைப்­ப­டங்­கள், காணொ­ளிக் காட்­சி­கள் ஆகி­ய­வற்­றில் பல­ரின் உடல் பகு­தி­க­ளி­லும் தலை­யி­லும் துப்­பாக்­கிக் குண்­டு­கள் பாய்ந்த நிலை­யில் பலர் இறந்து கிடப்­பது தெரிய வரு­வ­தாக செய்­தித் தக­வல்­கள் விவ­ரிக்­கின்­றன.

எனி­னும் இந்­தப் புகைப்­ப­டங்­கள், காணொ­ளி­கள் ஆகி­ய­வற்­றின் நம்­ப­கத்­தன்மை குறித்து உறு­தி­யாகக் கூற முடி­ய­வில்லை என்று ராய்ட்­டர்ஸ் செய்தி நிறு­வ­னம் கூறு­கிறது. இறந்­த­வர்­கள் அனை­வ­ரும் சாதா­ரண குடி­மக்­கள் என்று தெரி­வ­தாக ராய்ட்­டர்ஸ் விளக்கியது.