நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் டிக் டாக்குக்கு தடை

நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் டிக் டாக்குக்கு தடை

1 mins read
0411fafc-4d0e-4d0f-b82c-ae698f607d1f
-

சிட்னி: நியூ­சி­லாந்து இணைய பாது­காப்­புக் கருதி தனது நாடா­ளு­மன்ற கட்­ட­மைப்­பில் உள்ள சாத­னங்­களில் டிக் டாக்­குக்கு தடை விதித்­துள்­ளது.

டிக் டாக்­கின் தலைமை நிறு­வ­ன­மான பைட்­டான்ஸ் டிக் டாக் பய­னா­ளர்­க­ளின் தக­வல்­கள் அவர்­க­ளின் தங்­கு­மி­டம் போன்­றவை சீன அர­சாங்­கத்­தின் பிடி­யில் சிக்­கி­வி­டக்­கூ­டும் என்று உல­கின் பல நாடு­கள் கவ­லை­யு­றும் நிலை­யில் நியூ­சி­லாந்து இந்த முடிவை எடுத்­துள்­ளது.

இதைத் தொடர்ந்து நியூ­சி­லாந்து நாடா­ளு­மன்ற கட்­ட­மைப்­பில் தொர்­பு­ சாத­னங்­கள் அனைத்­தி­லும் டிக் டாக் இம்­மாத முடி­வில் தடை செய்­யப்­படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூ­சி­லாந்­தில் உள்ள இணைய பாது­காப்பு நிபு­ணர்­க­ளின் ஆலோ­சனை, அர­சாங்க கலந்­து­ரை­யா­டல், மற்ற நாடு­க­ளு­ட­னான கருத்­துப் பரி­மாற்­றம் ஆகி­ய­வற்­றின் முடி­வில் டிக் டாக்கை தடை செய்­யும் முடிவு எடுக்­கப்­பட்­ட­தாக நியூசிலாந்து நாடா­ளு­மன்ற தலைமை செயல் அதி­காரி ரஃப­யேல் கொன்­சா­லஸ் மொன்­டேரோ ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறி­னார்.