மில்லியன் வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஒப்புதல்

கோலலாம்பூர்: கட்­டு­மா­னம், தோட்­டத்­தொ­ழில், உற்­பத்தி, வேளாண்மை, சேவை­கள் ஆகிய ஐந்து முக்­கி­யத் துறை­களில் பணி­யாற்ற 995,396 வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்கு வேலை அனு­

ம­திச்­சீட்டு வழங்க மலே­சிய அர­சாங்­கம் ஒப்­பு­தல் அளித்­துள்­ளது.

இந்த எண்­ணிக்கை தொழில்­து­றை­க­ளின் வெளி­நாட்டு ஊழி­யர் தேவை­யைப் பூர்த்­தி­செய்­யும் என எதிர்­பார்ப்­ப­தாக மலே­சிய மனி­த­வள அமைச்­சர் வி.சிவ­குமார் தெரி­வித்­துள்­ளார்.

ஆகை­யால், வெளி­நாட்டு ஊழி­யர் வேலை­வாய்ப்பு விதித்­த­ளர்­வுத் திட்­டத்­தின்­கீழ் இனி­மேல் வெளி­நாட்டு ஊழி­யர் ஒதுக்­கீட்­டிற்­கான விண்­ணப்­பங்­களை ஏற்­ப­தை­யும் ஒப்­பு­தல் அளிப்­ப­தை­யும் மறு­அ­றி­விப்பு வெளி­யா­கும்­வரை ஒத்­திப்­போட மலே­சிய அர­சாங்­கம் முடி­வு­செய்­துள்­ளது என்று அமைச்­சர் சிவ­கு­மார் கூறி­னார்.

வெளி­நாட்டு ஊழி­யர்­களை வேலைக்கு எடுக்க அனு­மதி பெற்­றுள்ள நிறு­வ­னங்­கள், அவர்­களை வேலை­யில் அமர்த்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை விரைந்து மேற்­கொள்­ளு­மா­றும் அவர் வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.

அனு­மதி அளிக்­கப்­பட்­டுள்ள எண்­ணிக்­கை­யோடு ஒப்­பிட்டு பார்த்­தால் வெளி­நாட்டு ஊழி­யர்­கள் மலே­சி­யா­விற்கு வரும் எண்­ணிக்கை குறை­வா­கவே உள்­ளது என்­றும் அவர் சுட்­டி­னார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!