சிங்கப்பூருக்கு வேலைக்கு வரும் வழியில் விபத்து; தம்பதி மரணம்

1 mins read
a0dedd98-7f10-44fe-90d6-7495e7ddcb73
-

ஜோகூர் பாரு: கண­வ­னும் மனை­வி­யு­மாக மோட்­டார்­சைக்­கி­ளில் சிங்­கப்­பூ­ருக்கு வேலைக்கு வந்­த­போது, விபத்­தில் சிக்கி இரு­வ­ரும் உயி­ரி­ழந்­த­னர்.

இச்­சோக சம்­ப­வம் மலே­சி­யா­வின் ஜோகூர் பாரு, புக்­கிட் இண்டா நெடுஞ்­சா­லை­யில் சென்ற வியா­ழக்­கி­ழமையன்று காலை­யில் நிகழ்ந்­தது.

துவாஸ் சோத­னைச்­சா­வ­டி­யில் இருந்து கிட்­டத்­தட்ட 18 கிலோ­மீட்­டர் தொலை­வில் இவ்­வி­பத்து நிகழ்ந்­த­தா­கக் கூறப்­பட்­டது.

திரு லோ கிம் சியோங், 36 - திரு­வாட்டி டான் லே ரூ, 30, என்ற அவ்­வி­ணை­யர் இரு­வ­ரும் நிகழ்­வி­டத்­தி­லேயே மாண்­டு­போ­ன­தா­கக் கூறப்­பட்­டது.

இவ்­வி­ணை­ய­ருக்கு ஏற்­கெ­னவே மூன்று வய­தில் ஒரு மகன் இருக்­கி­றான். இந்­நி­லை­யில், திரு­வாட்டி டான் வரும் மே மாதம் இன்­னொரு குழந்­தை­யைப் பெற்­றெ­டுக்க இருந்­த­தாக திரு லோவின் இளைய சகோ­தரி லோ ஷி மெய் குறிப்­பிட்­டார்.

ஜோகூர் பாரு­வின் செட்­டியா இண்டா பகு­தி­யில் அவ்­வி­ணை­யர் வசித்து வந்­த­னர் என்­றும் பல ஆண்­டு­க­ளாக அவர்­கள் சிங்­கப்­பூர் சென்று வேலை­செய்து வந்­த­னர் என்­றும் திரு­வாட்டி லோ கூறி­னார்.

திரு லோ 'டாப்ஸ்­டீல் சொல்­யூ­சன்ஸ் ஏஷியா' நிறு­வ­னத்­தில் சேமிப்­புக்­கி­டங்கு உத­வி­யா­ள­ரா­க­வும் திரு­வாட்டி டான் 'விஸ்டா ஹார்ட்­வேர் சப்­ளைஸ்' நிறு­வ­னத்­தில் விற்­பனை ஒருங்­கி­ணைப்­பா­ள­ரா­க­வும் வேலை­செய்து வந்­த­னர்.

இரு­வ­ரின் உடல்­களும் நாளை ஞாயிற்­றுக்­கி­ழமை நல்­ல­டக்­கம் செய்­யப்­ப­ட­வுள்­ள­தாக திரு­வாட்டி லோ கூறி­னார்.