இம்ரான் கானின் வீட்டுக் கதவை உடைத்து உள்ளே புகுந்த காவல்துறை

லாகூர்: பாகிஸ்­தா­னின் முன்­னாள் பிர­த­மர் இம்­ரான்­கா­னின் வீட்­டைச் சோத­னை­யி­டு­வ­தற்­காக காவல்­து­றை­யி­னர் கதவை உடைத்து உள்ளே புகுந்­த­னர்.

அப்போது வழக்கு விசா­ர­ணைக்­காக இம்ரான் கான் இஸ்­லா­மா­பாத் சென்றிருந்தார்.

வீட்­டிற்கு வெளியே மணல் மூட்­டை­கள், கப்­பல் கொள்­க­லன்­கள் போன்­ற­வற்றை வைத்து தடுப்­பு­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்த இம்­ரான் கானின் ஆத­ர­வா­ளர்­கள் பல­ரை­யும் பாது­காப்பு படை­யி­னர் கைது செய்­த­னர்.

இது­பற்றி கூறிய இம்­ரான் கான், “லாகூர் வீட்­டில் தனது மனைவி தனியே இருந்­த­போது காவல்­து­றை­யி­னர் அத்­து­மீறி உள்ளே புகுந்­துள்­ள­னர். என் மீது கொலை முயற்சி தாக்­கு­த­லில் காவல்­து­றை­யி­னர் ஈடு­ப­டு­கின்­ற­னர்,” என்­றார் அவர்.

தாம் பிர­த­ம­ராக இருந்­த­போது கிடைத்த பரி­சுப் பொருள்­களை சட்­ட­வி­ரோ­த­மாக விற்­றது தொடர்­பான வழக்கு விசா­ர­ணைக்­காக அவர் நீதி­மன்­றத்­திற்­குச் சென்­றார். அப்­போது தாம் கைது செய்­யப்­பட அதிக வாய்ப்­புள்­ள­தாக அவர் கூறி­னார். வரும் தேர்­த­லில் தாம் போட்­டி­யி­டு­வ­தைத் தடுப்­ப­தற்­கான சதி நடப்­ப­தா­க­வும் அவர் சொன்­னார்.

இதற்­கி­டையே நீதி­மன்­றத்­திற்­குச் செல்­லும் வழி­யில் இம்­ரான் கானின் பாது­காப்பு வாகனங் களில் ஒன்­றின்­மீது மற்­றோர் வாக­னம் மோதிய விபத்­தில் மூவர் காய­ம­டைந்­த­னர். மேலும் ஒன்­பது வழக்­கு­களில் லாகூர் நீதி­மன்­றம் இம்­ரான் கானுக்கு பிணை வழங்கி உள்­ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!