சோல்: அமெரிக்காவிற்கு எதிராக போரிட கிட்டத்தட்ட 800,000 குடிமக்கள் முன்வந்துள்ளதாக வடகொரியா தெரிவித்துள்ளது.
மாணவர்கள், பணியாளர்கள் என வெள்ளிக்கிழமை மட்டும் கிட்டத்தட்ட 800,000 பேர் மீண்டும் ராணுவத்தில் இணைந்து அமெரிக்காவிற்கு எதிராக போரிட விருப்பம் தெரிவித்துள்ளதாக அந்நாட்டின் ரோடோங் சின்முன் நாளிதழ் சொன்னது.
அமெரிக்காவும் தென்கொரியாவும் சென்ற திங்கட்கிழமை முதல் 11 நாள் கூட்டு ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
அத்துடன் தென்கொரிய அதிபரும் வடகொரியாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தைக்காக ஜப்பான் வியாழக்கிழமை ஜப்பான் சென்றிருந்தார். தென்கொரியாவும் அமெரிக்காவும் வட்டாரத்தில் பதற்றத்தை ஏற்படுத்துவதாக வடகொரியா சொன்னது.
இவ்வேளையில், வியாழக்கிழமையன்று வடகொரியா ஹவாசாங்-17 என்ற கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை பரிசோதனை செய்தது.
அந்த ஏவுகணை கொரிய தீபகற்பத்திற்கும் ஜப்பானுக்கும் இடையில் ஏவப்பட்டது.